இலங்கையில் இருந்து வரும் பயணிகள் விமானங்களை மறு அறிவித்தல் வரை ரத்துச் செய்வதற்கு குவைட் இராச்சியம் தீர்மானித்துள்ளது.

கொவிட் 19 பரவல் நிலையை கருத்திற் கொண்டு இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய அரபு இராச்சியமும் நாளை (12) தொடக்கம் இலங்கை பயணிகள் விமானங்களுக்கு தடை விதிப்பதாக நேற்று (10) அறிக்கை ஒன்றை வௌியிட்டிருந்தது.

அதேபோல், மலேசியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளும் இந்நாட்டு பயணிகள் விமானங்களுக்கு தற்காலிக தடையை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.