மாதகல், புளியந்துறை பகுதியில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டு மரத்தில் இருந்து 55 kg கஞ்சா தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இளவாலை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதியில் தேடுதல் நடாத்திய போது குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட 26 சிறிய பொதிகள் அடங்கிய 2 கஞ்சா பொதிகள் வட்டுகோட்டை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.