பிரித்தானிய ராணி ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தியும், இளவரசர் ஆண்ட்ரூவின் மகளுமான இளவரசி பீட்ரைசுக்கு வெள்ளிக்கிழமை மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்தது.
சமீப ஆண்டுகளில் நடந்த அரண்மனை திருமணங்கள் போன்று அல்லாமல் மிக எளிமையாக இளவரசி பீட்ரைஸ் திருமணம் நடந்துள்ளது.
கொரோனா பரவல் மறும் ஊரடங்கு நடவடிக்கைகள் காரணமாகவே, மிகவும் எளிமையாக திருமணம் நடத்தப்பட்டுள்ளது.
மட்டுமின்றி ரகசியமாக நடத்தப்பட்ட குறித்த திருமணத்தில் பொதுமக்களின் பங்களிப்பு அறவே இல்லை என தெரியவந்துள்ளது.
அதாவது இளவரசி பீட்ரைசின் திருமணமானது, பொதுமக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
கடந்த காலத்தில் பிரித்தானிய அரண்மனை திருமணங்களுக்கு எவ்வளவு செலவானது, மேலும் ஆடம்பரம் ஏதுமற்ற அரண்மனை திருமணத்திற்கு செலவு எவ்வளவு என்பது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை 17 ஆம் திகதி நடந்த இளவரசி பீட்ரைஸ் திருமணத்திற்கு பொதுமக்கள் வரிப்பணத்தில் எவ்வளவு செலவானது என்ற தகவல் வெளியாகவில்லை.
ஆனால் உண்மையில் இந்த திருமணம், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் சார்பில் செலவுகளை ஏற்றுக்கொண்டு மிக எளிமையாக நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
பொதுவாக பிரித்தானிய பொதுமக்களின் வரிப்பணமானது பாரம்பரியமாக அரண்மனை திருமணங்களுக்கான பாதுகாப்பு செலவுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
அரண்மனை, மலர்கள் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட அன்றைய மிக முக்கியமான அம்சங்களுக்கு பணம் செலவு செய்கிறது.
இந்த நிலையிலேயே, இளவரசி பீட்ரைசின் திருமணத்திற்கான செலவை அரண்மனையே ஏற்றிக்கொள்ளும் என்ற தகவலை பக்கிங்ஹாம் அரண்மனை 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் உறுதிப்படுத்தியது.
இதனையடுத்து தற்போது இளவரசி பீட்ரைசின் திருமண செலவானது குடும்ப உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த இளவரசர் ஹரி மற்றும் மேகன் மெர்க்கல் திருமணத்திற்கு மொத்தம் 32 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ளது.
அதில் 30 மில்லியன் பவுண்டுகள் திருமணத்திற்கு தேவையான பாதுகாப்புக்கும் அதைச் சுற்றியுள்ள நிகழ்வுகளுக்கும் செலவிடப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த திருமண நிகழ்வானது உலகமெங்கும் நேரலை செய்யப்பட்டதால், செலவான தொகையை விடவும் அதிக வருவாய் ஈட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இளவரசர் ஹரி - மேகன் மெர்க்கல் திருமணமானது சுமார் 80 மில்லியன் பவுண்டுகளை பிரித்தானிய பொருளாதாரத்திற்கு ஈட்டித் தந்தது என்று நிதி மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதிகளின் திருமணத்திற்கு சுமார் 23.7 மில்லியன் பவுண்டுகள் செலவானதாக கூறப்படுகிறது.
ஆனால் தனியார் நிறுவனம் ஒன்று அப்போது மேற்கொண்ட ஒரு ஆய்வில், இளவரசர் வில்லியம் திருமணமானது பிரித்தானியாவுக்கு 2 பில்லியன் பவுண்டுகளை ஈட்டித்தரலாம் என கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.