நாளை (08) காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 10 மணித்தியாலங்களுக்கு சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
லங்கா மின்சார தனியார் நிறுவனத்தினால் (LECO) மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக கொலன்னாவ நீரேற்று நிலையத்திற்கான மின்சார விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளால் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக அந்த சபை அறிவித்துள்ளது.
நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் பிரதேசங்கள் பின்வருமாறு,
கொலன்னாவ நகரசபை, மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, எதுல்கோட்டை, நாவல, கொஸ்வத்தை, இராஜகிரிய மற்றும் நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையிலான பிரதான வீதி மற்றும் அனைத்து கிளை வீதிகள்.
நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், தேவைக்கு ஏற்ப நீரைச் சேகரிக்குமாறு பிரதேசவாசிகளிடம் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கோரியுள்ளது.
மேலதிக தகவல்களை அறிய விரும்பினால், 1939 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை 10 மணித்தியால நீர்வெட்டு!
- Master Admin
- 07 May 2023
- (209)

தொடர்புடைய செய்திகள்
- 06 December 2020
- (481)
காலி மாவட்டத்தில் உள்ள 26 பாடசாலைகளுக்கு...
- 09 August 2020
- (523)
புதிய பிரதமர் இன்று பதவியேற்ப
- 22 March 2024
- (318)
மீனத்தில் நுழையும் சூரியன்... வாழ்க்கையே...
யாழ் ஓசை செய்திகள்
கொழும்பில் ATM பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
- 08 July 2025
பாடசாலைகளுக்கான நிதி தொடர்பாக பிரதமரின் அறிவிப்பு
- 08 July 2025
இடியுடன் கொட்டித் தீர்க்க போகும் கனமழை
- 08 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.