நடிகை வனிதா நடித்துள்ள Malli Pelli திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது.

தமிழ் திரையுலகில், மூன்று தலைமுறைகளாக நடித்து கொண்டிருக்கும் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதிகளின் மூத்தமகள் தான் நடிகை வனிதா.

குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்த இவர், பின்பு விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின்பு ஆகாஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன், இரண்டு மகள் உள்ள நிலையில் அவரைப் பிரிந்தார். இதில் மகன் ஆகாஷிடமும், மகள் வனிதாவுடன் இருந்து வருகின்றனர்.

பின்பு இரண்டாவது திருமணம், ராபர்ட் மாஸ்டருடன் வாழ்க்கை, அடுத்து ஒரு திருமணம் என்று பல சர்ச்சைகளில் சிக்கிய இவர், பிரபல ரிவியில் ஒளிபரப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன்பின்பு குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், பிபி ஜோடியில் ரம்யாகிருஷ்ணனிடம் வாக்குவாதம் செய்துவிட்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

கையில் வழியும் ரத்தம்! வேறொருவருடன் நெருக்கமாக நடிகை வனிதா... புகைப்படத்தின் பின்னணி என்ன? | Vanitha Vijayakumar Malli Pelli Movie

இவ்வாறு பல சர்ச்சைகளில் சிக்கிய வனிதா தற்போது Malli Pelli என்ற தெலுங்கு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவரின் எதார்த்தமான நடிப்பின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றார்.

இந்த படத்தில் நரேஷ் விஜய்கிருஷ்ணா, பவித்ரா லோகேஷ், ஜெயசுதா, சரத் விஜய்கிருஷ்ணா, வனிதா விஜய் குமார், அனன்யா நாகல்லா, ரோஷன், ரவி வர்மா, அன்னபூர்ணா, பத்ரம், யுக்தா, பிரவீன் யண்டமுரி, மது உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

மேலும் குறித்த படத்தில் நரேஷ் உடன் நடித்ததற்கு பெருமை கொள்வதாகவும், குறித்த படம் குடும்பப்படம், பொழுதுபோக்கு படம் என்றும் திரையரங்கில் வந்து பாருங்கள் என்றும் இப்படத்தில் தனது ரொமான்ஸான புகைப்படத்தினையும் பகிர்ந்துள்ளார்.

கையில் வழியும் ரத்தம்! வேறொருவருடன் நெருக்கமாக நடிகை வனிதா... புகைப்படத்தின் பின்னணி என்ன? | Vanitha Vijayakumar Malli Pelli Movie

கையில் வழியும் ரத்தம்! வேறொருவருடன் நெருக்கமாக நடிகை வனிதா... புகைப்படத்தின் பின்னணி என்ன? | Vanitha Vijayakumar Malli Pelli Movie