தமிழகத்தை சேர்ந்த இளைஞரொருவர் விஜயை பார்ப்பதற்காக தன்னுடைய மனைவியின் தாலியை அடமானம் வைத்துள்ளார்.

நடிகர் விஜய்க்கு தமிழகம் மட்டுமல்ல பல நாடுகளிலும் இலட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் நீலாங்கரையில் இடம்பெற்ற மாணவர்கள் தொடர்பிலான நிகழ்வொன்றில் கலந்து கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து பல மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கியதுடன், புகைப்படங்களையும் எடுத்து கொண்டுள்ளார்.

விஜய்காக மனைவியின் தாலியை அடமானம் வைத்த ரசிகன்! ஏமாற்றத்தில் வீடு திரும்பிய அவலம் | Fan Disappointed By Vijayஅந்த வகையில் நேற்றைய தினம் அவரின் 49 ஆவது பிறந்தநாளை ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளார்.

இந்த விடயம் தெரிந்து கொண்ட தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ஜெய்கணேஷ் தனது மனைவி குழந்தையுடன் சென்னைக்கு வந்துள்ளார்.

இவர் வருவதற்காக பணம் இல்லையாம், அதனால் மனைவியின் கழுத்திலுள்ள தாலியை அடமானம் வைத்து தான் வருகை தந்துள்ளார்.

விஜய்காக மனைவியின் தாலியை அடமானம் வைத்த ரசிகன்! ஏமாற்றத்தில் வீடு திரும்பிய அவலம் | Fan Disappointed By Vijayஆனாலும் நடிகர் விஜயை சுமார் 17 மணித்தியாலங்கள் வரை காத்திருந்தும் பார்க்காமல் கவலையுடன் அந்த குடும்பம் ஊர் திரும்பியுள்ளது.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது, இதனை பார்த்த இணையவாசிகள், “விஜயிற்காக இப்படி ரிஸ்க்காக?” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.