இன்று வீட்டில் பெற்றோர்களுக்கு குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பது மிகப்பெரிய சவாலாகவே இருந்து வருகின்றது.

அம்மாக்கள் என்னதான் சுவையாக சமைத்தாலும் குழந்தைகள் அதனை விரும்பி சாப்பிடாமல் அடம்பிடிக்கின்றனர். அவ்வாறு அடம்பிடிக்கும் குழந்தைகளை சாப்பிட வைக்க சில வழிமுறைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு வெளியில் இருந்து நொறுக்கு தீனி வாங்கிக் கொடுப்பதை பெற்றோர்கள் தவிர்க்கவும்.

பசி எடுக்கும் நேரத்தில் கொடுக்கும் உணவை முழுவதுமாக சாப்பிடுவார்கள். ஆதலால் அந்த நேரத்தை தெரிந்து கொண்டு உணவு கொடுக்கவும்.

குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு அளிப்பதுடன், பல நிறங்களில் இருக்கும் காய்களையும், அவர்கள் சாப்பிடும் தட்டும் சில வண்ணங்களில் இருக்குமாறு செய்தல் வேண்டும்.

குழந்தைகள் தனக்கு பிடித்தமான உணவையே சாப்பிட மறுக்கின்றனர் என்றால் வயிற்றில் பிரச்சினை இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அல்லது உணவு விழுங்குவதில் சிரமம் இருக்கின்றதா என கண்டறிந்து கொள்ளவும்.

குழந்தைகளை நன்கு வெளியே விளையாட விட வேண்டும். அப்போது உடல் களைத்து போவதால் பசி எடுக்க ஆரம்பிக்கும். உணவையும் ஆர்வமாக சாப்பிடுவார்கள்.

தினமும் ஒரே மாதிரியான உணவுகளை வழங்காமல் சற்று வித்தியாசமாகவும், புதுமையாகவும் இருக்க வேண்டும்.

உணவை கண்டாலே குழந்தைகள் தலைதெறிக்க ஓடுகின்றனரா? பெற்றோர்களே தெரிஞ்சிக்கோங்க | Kids Picky Eaters Tips In Tamilஉணவு ஊட்டும் போது அதிகமாக கொஞ்சும் பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டாம். அனைத்து நேரத்திலும் ஒரே மாதிரியான அன்பை காட்ட வேண்டும். ஏனெனில் நமது கரிசன நேரத்தினை நீட்டித்துக் கொள்வதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளுமாம்.

குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போது, சிறு சிறு கதைகளை கூறிக்கொண்டு சாப்பிட்டால், குடும்பத்தின் மீது அதிக அன்பு ஏற்படுவதுடன், உணவை முழுமையாகவும் சாப்பிடுவார்கள்.

சாப்பிடும் போது டிவி, செல்போன் கொடுத்து பழக்க வேண்டாம். 

உணவை கண்டாலே குழந்தைகள் தலைதெறிக்க ஓடுகின்றனரா? பெற்றோர்களே தெரிஞ்சிக்கோங்க | Kids Picky Eaters Tips In Tamil