கோடிக்கணக்கான பயனர்களின் இதயத்தை ஆளும் வாட்ஸ்அப், மற்றொரு புதிய அம்சத்தின் சோதனையை தற்போது தொடங்கி இருக்கின்றது.

வாட்ஸ் அப் நிறுவனம் தனது செயலியில் பயனர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த புதிய அம்சத்திற்கான துவக்க புள்ளியை வைத்துள்ளது.

ஆம் ஒரே சாதனத்தில் பல வாட்ஸ் அப் கணக்குகள் ஸ்விட்ச் செய்து பயன்படுத்த முடியுமாம். இதனால் வாட்ஸ் அப் பயனர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய அம்சம் மல்டி-அக்கவுன்ட் என்று அழைக்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் எளிதில் தங்களது அக்கவுன்ட்கள் இடையே மாற்றிக் கொள்ளலாம்.

இந்த அம்சம் பற்றிய தகவலை Wabetainfo வெளியிட்டு உள்ளது. அதன்படி இந்த அம்சம் முதற்கட்டமாக வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.23.17.7 மற்றும் 2.23.17.8 போன்ற வெர்ஷன்களில் கிடைக்கிறது.

ஒரே போனில் பல வாட்ஸ் அப் கணக்கை பயன்படுத்தலாம்... புதிய அம்சத்தால் குஷியில் பயனர்கள் | Whatsapp Multi Account Betaபீட்டா டெஸ்டர்கள் மல்டி அக்கவுன்ட் அம்சத்தை தங்களது வாட்ஸ்அப் செட்டிங்கில் உள்ள கியூ.ஆர். கோடுக்கு அருகில் இருக்கும் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்த பின்பு குறித்த அம்சம் வழங்கப்பட்டிருந்தால், மற்றொரு கணக்கை சேர்த்துக் கொள்ள முடியும். புதிய கணக்கின் மொபைல் எண் மற்றும் கடவுள்செல்லையும் பதிவிட வேண்டும்.

மற்றொரு அக்கவுன்டிற்கு மாற்றிக் கொள்ள வேண்டுமெனில் அதே ஐகானை மீண்டும் க்ளிக் செய்து அந்த அக்கவுன்டிற்கு மாற்றிக் கொள்ளலாம். 

தற்போது இந்த அம்சம் பீட்டா வெர்ஷனில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. ஆதலால் மற்ற அனைவருக்கும் இந்த ஸ்டேபில் வெர்ஷன் வழங்கப்படும் என்ற கேள்வி பயனர்களுக்கு எழுந்துள்ளது.

ஒரே போனில் பல வாட்ஸ் அப் கணக்கை பயன்படுத்தலாம்... புதிய அம்சத்தால் குஷியில் பயனர்கள் | Whatsapp Multi Account Beta