பொதுவாக அனைவருக்குமே கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று தான் நினைப்பார்கள், ஆனால் இவை அனைத்தும் நடப்பதற்கு என்ன வழி என்று தான் தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறோம்.
ஒரு சில பரிகாரங்கள் மூலமாகவும், வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்வதன் மூலமாகவும் மாற்றத்தை பெறலாம்.
இதற்காகவே நம் முன்னோர்கள் தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என கூறிவைத்திருக்கின்றார்கள்.

இது வெறும் வார்தை இல்ல பிரபஞ்சத்தின் சக்தியை அறிந்தே இதனை சொல்லியிருக்கின்றனர். ஆம் பிரபஞ்சம் நாம் மற்றவர்களுக்கு எவ்வளவு உதவி செய்கின்றோமோ அதைவிட பல மடங்கு நமக்கு திருப்பிக் கொடுக்கும்.
நாம் சம்பாதிக்கும் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை சேர்த்து வைத்து, அதனை அன்னதானத்திற்காக செலவிட்டால் செலவிட்ட தொகையை போல் ஐந்து மடங்கு திரும்பி கிடைக்குமாம் என்பது ஐதீகம்.

எம்முடைய வீடுகளில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்து, அவர்களை மஞ்சளாக பிடித்து, வழிபட சகல தனவரவு ஏற்பட்டு, முன்னேற்றம் உண்டாகும், தனம் அதிகமாக கிடைக்க வேண்டும்.
வில்வ மரத்தடியில் தந்திர சாஸ்திரப்படி தனதாயட்சிணி பூஜையை செய்தால் மிக விரைவில் பண வரவு கிடைக்கும். குறித்த பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்துவர பணப்பிரச்சினை முற்றாக நீங்கிவிடும்.
