பொதுவாக வீடுகளில் எலி தொல்லைகள் என்பது அதிகமாகவே இருக்கும். இதனால் எந்தவொரு பொருளையும் பாதுகாப்பாக வைக்க முடியாமல் தடுமாறுவதுடன், இதனால் நோய்க்கிருமிகளும் எளிதில் பரவி வருகின்றது.

எலிப்பொறியில் தக்காளி அல்லது தேங்காய் துண்டு, கருவாடு இவற்றினை வைத்து பிடிப்பதுண்டு. அதே போன்று எலிகளை ஒளித்து கட்ட என்ன செய்யலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.

எலிகளுக்கு எதிரி புதினா இலை என்பதை கூறலாம். எலிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில், புதினா இலைகளை கசக்கு போட்டு வைக்கலாம். புதினா சேர்க்கப்பட்டுள்ள டூத் பேஸ்ட்களை சிறு சிறு உருண்டையாக தடவி வைத்தால் எலிகள் மயங்கிவிடும்.

எலி தொல்லையை ஓட ஓட விரட்டணுமா? ஈஸியான வழி இதோ | Better Solution Rat Infestation

பிரியாணிக்கு போடப்படும் பிரிஞ்சி இலை நல்ல வாசனையுடன் இருப்பதுடன், இந்த நறுமணமானது எலிக்கு பிடிக்காது. இதனை சிறு சிறு துண்டுகளாக உடைத்தோ அல்லது கொரகொரப்பான பொடியாகவோ தயார் செய்து எலி நடமாட்டம் இருக்கும் இடத்தில் தட்டில் போட்டு வைக்கவும்.

எலி தொல்லையை ஓட ஓட விரட்டணுமா? ஈஸியான வழி இதோ | Better Solution Rat Infestationகம்பி வளைகளும் எலிகள் வீட்டிற்குள் நுழைவதை தடுக்கின்றது. அதாவது எலியின் நடமாட்டம் உள்ள வழித்தடங்களை கண்டுபிடித்து அதில் மெல்லிய கம்பி வலை போட்டு எலி தொல்லையிலிருந்து விடுபடலாம்.

பாத்திரம் சுத்தம் செய்வது, வீட்டை சுத்தப்படுத்துவது, கறைகளை நீக்க, சருமத்துக்கு பயன்படுத்துவது என பல விடயங்களுக்கு பயன்படுத்தப்படும் பேக்கிங் சோடா எலிகளை விரட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. பேக்கிங் சோடா கரைசலை தெளித்து விட்டால் நல்ல பலனைக் காணலாம்.

எலி தொல்லையை ஓட ஓட விரட்டணுமா? ஈஸியான வழி இதோ | Better Solution Rat Infestation