தற்போது ராகு கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சூரியன் பிப்ரவரி 13 ஆம் திகதி கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கும்ப ராசியில் ஏற்கனவே ராகு இருப்பதால், கும்பத்தில் ராகு-சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையானது சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது.

ராகு சூரிய சேர்க்கையால் சில ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்போது கும்பத்தில் நிகழும் ராகு சூரிய சேர்க்கையால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என நாம் இங்கு பார்ப்போம்.

கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதன் விளைவாக வேலையில் தடைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். திடீர் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக சேமித்து வைத்த பணம் குறையும் வாய்ப்புள்ளது. தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் சிரமப்படக்கூடும். இந்த சேர்க்கையின் மோசமான விளைவைக் குறைக்க சிவபெருமானை தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் மன அழுத்தத்தை அனுபவிக்கக்கூடும். பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். பணியிடத்தில் அரசியல் மற்றும் சர்ச்சைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். இல்லாவிட்டால், பெரிய அளவில் பிரச்சனையில் சிக்குவீர்கள். இக்காலத்தில் எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். எனவே தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த வேலையை செய்தாலும் கவனமாக இருக்க வேண்டும். இந்த சேர்க்கையின் மோசமான விளைவைக் குறைக்க கோதுமை அல்லது வெல்லம் தானம் செய்ய வேண்டும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் குடும்ப விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தாயின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான முடிவுகளை பெரிய முடியாமல் போகலாம். வாகனம் ஓட்டும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த சேர்க்கையின் மோசமான விளைவைக் குறைக்க சூரிய பகவானுக்குரிய மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்.

மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை குறையும். வாழ்வில் பல தடைகளை சந்திக்க நேரிடும். பண விஷயங்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் இருந்து திசைதிருப்பப்படலாம். குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் பேசும் போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த சேர்க்கையின் மோசமான விளைவைக் குறைக்க சிவப்பு நிற ஆடைகளை தானம் செய்வது நல்லது.

