பொதுவாகவே வாழ்கைக்கு தேவையாக பல விடயங்கள் வாஸ்து சாத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை முறையாக பின்பற்றுவதால் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று மனநிறைவுடன் வாழ முடியும். 

அந்த வகையில் வீட்டில் நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கவும் நிதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் வீட்டை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது தொடர்பிலும் வீட்டில் வைக்க கூடாத பொருட்கள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம். 

இந்த பொருட்கள் வீட்டில் இருக்கா? உடனடியா அப்புறப்படுத்துங்க துர்திஷ்டம் ஏற்படுமாம்...! | Do Not Keep These Items In Your House

நாம் சிலருடைய வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் வீட்டு மிகவும் அழகாக பராமரித்து வைத்திருப்பார்கள். ஆனால் ஒரு சிலரோ தங்களுடைய வீட்டில் அலங்கோலமாக வைத்திருப்பார்கள். குறிப்பாக தேவையில்லாத பொருட்களை பொக்கிஷம் போல பாதுகாத்து வைத்திருப்பார்கள்.

உங்கள் வீடு அல்லது அலுவலகமாக இருந்தாலும் சரி அங்கு நீங்கள் உபயோகிக்காத அல்லது தேவையில்லாத பொருட்களை வைக்க வேண்டாம். ஏனெனில் அவை எதிர்மறை எண்ணங்களை அதிகரிக்கச் செய்யும்.இப்படி நீங்கள் தேவையில்லாத பொருட்களை வீட்டில் வைத்தால் வீட்டில் ஓயாத சண்டை, கோபம் போன்றவை அடிக்கடி நடந்து கொண்டே இருக்கும். இவை எதிர்மறை எண்ணங்களை கொண்டு வரும் என வாஸ்து சாத்திர நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.  

அதன்படி உடைந்த கண்ணாடிகள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், மண் பாண்டங்கள், காய்ந்த செடிகள் அல்லது பட்டுப்போன மரங்கள், ஓடாத கடிகாரம், துருப்பிடித்த இரும்பு பொருட்கள், கிழிந்த ஆடைகள், உபயோகம் இல்லாத பழைய துணிகள், போன்றவை எதிர்மறை எண்ணங்களை அதிகரிக்கச் செய்யும்.

மேலும் இவை எதிர்மறை எண்ணங்களை பெருக்குவதோடு மட்டுமல்லாமல், வருமானத்தில் தடையையும் கொண்டுவரும். அது போல் காய்ந்த செடியானது வீட்டை சுற்றி எதிர்மறை எண்ணங்களை உண்டாக்கும்.

இந்த பொருட்கள் வீட்டில் இருக்கா? உடனடியா அப்புறப்படுத்துங்க துர்திஷ்டம் ஏற்படுமாம்...! | Do Not Keep These Items In Your Houseபட்டுப்போன செடி அல்லது மரமானது வீட்டில் வறுமையை உண்டாக்கும். ஓடாத கடிகாரம் எதிர்மறை ஆற்றல்களை ஏற்படுத்துவதால், வீட்டில் கடன் பிரச்சனை, சண்டை சச்சரவுகள் நிகழும். மேலும் துருப்பிடித்த இரும்பு பொருட்கள், கிழிந்த ஆடைகள், துணிகள் ஆகியவையும் வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை உண்டாக்கும்.

இந்த பொருட்கள் வீட்டில் இருக்கா? உடனடியா அப்புறப்படுத்துங்க துர்திஷ்டம் ஏற்படுமாம்...! | Do Not Keep These Items In Your Houseஇதுபோன்று பொருட்கள் உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் நீங்கள் வைத்திருந்தால் அவற்றை உடனே அகற்றுவது நல்லது.

இந்த பொருட்கள் வீட்டில் இருக்கா? உடனடியா அப்புறப்படுத்துங்க துர்திஷ்டம் ஏற்படுமாம்...! | Do Not Keep These Items In Your House

இது மட்டுமில்லாமல் உங்கள் வீட்டை நீங்கள் எப்போதும் அழகாகவும் சுத்தமாகவும் பராமரித்து வந்தால் வீட்டில் நேர்தறை ஆற்றல்கள் அதிகரிக்கும் இதனால் நல்ல எண்ணங்கள்  அதிகமாக ஈர்க்கப்பட்டு மனநிம்மதி அதிகரிக்கும்.