கோடை காலத்தில் மக்கள் அதிகம் விரும்பி அருந்தும் இளநீரை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக கோடை காலம் வந்துவிட்டாலே அதிக சூரிய ஒளி நம்மை சோர்வடைய வைத்துவிடும். இதற்கு முக்கிய காரணம் நமது உடம்பிலிருந்து வெளியேறும் அதிகப்படியாக வியர்வை தான்.

காலநிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ளவும், பாதுகாப்பாக இருக்கவும் உணவு மிகவும் முக்கியமாகும். வெயில் கடுமையாக இருக்கும் கோடைகாலங்களில் உடம்பில் நீர்ச்சத்து அதிகமாக தேவைப்படுகின்றது.

வியர்வை அதிகமாக வெளியேறி சோர்வை ஏற்படுத்துவதுடன், வேலையிலும் தாமதம் ஏற்படுகின்றது. இந்நிலையில் கோடை காலத்தில் இளநீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக உள்ளது.

ஆனால் இளநீரை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும் என்பது நம்மில் யாருக்கும் அவ்வளவாக தெரிவதில்லை. இந்த பதிவில் அதனை தெரிந்து கொள்ளலாம்.

இளநீரை நன்கு தண்ணீர் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும். அதனை எவ்வாறு சோதிக்க வேண்டும் எனில், இளநீரை எடுத்து நன்றாக குலுக்கி பார்த்தால் அதில் சத்தம் கேட்டால் குறைவான தண்ணீர் இருக்கின்றது என்று அர்த்தம். 

சத்தம் குறைவாகவோ, சத்தம் இல்லாமலோ இருந்தால் அதில் தண்ணீர் அதிகமாக இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் இளநீர் வட்டமாக பெரிய உருளையாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தாலும் தண்ணீர் அதிகமாக இருக்கும் என்று அர்த்தம்.

இளநீரை எப்படி பார்த்து வாங்க வேண்டும்? | How To Check Pick Coconut With Full Of Waterசில இளநீரில் அடர் பழுப்பு நிற புள்ளிகள் இருந்தால், அதில் தண்ணீர் குறைவாகவும், முதிர்ந்தும் காணப்படும்.

ஆகவே பச்சை நிறத்தில் உள்ள இளநீரை வாங்குவதை வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.

வழுக்கை இளநீராக வேண்டும் என்றால் அதன் சுவை நன்றாக இருக்கும், ஆனால் தண்ணீர் குறைவாகவே இருக்கும். 

இளநீரில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க வேண்டும் எனில், வாங்கி உடனே கடையில் வைத்து குடித்துவிட வேண்டும்.

இளநீரை எப்படி பார்த்து வாங்க வேண்டும்? | How To Check Pick Coconut With Full Of Water