பொதுவாகவே ஆண்களானாலும் சரி பெண்களானாலும் சரி திருமணத்திற்கு பின்னர் இருவரின் வாழ்விலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றது.

இந்த மாற்றங்களால் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எல்லா பெண்களுக்குமே திருமணத்துக்கு பின்னர் கணவன் தான் உலகம் என்று ஆகிவிடும். 

கணவனிடம் எல்லா விடயங்களையும் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்றே பெண்கள் ஆசைபட்படுவார்கள் ஆனால் சாணக்கிய நீதியின் அடிப்படையில் பெண்கள் கணவனிடம் பகிரவே கூடாத சில விடயங்கள் பற்றி குறிப்பிடப்படுகின்றது. 

குறிப்பிட்ட சில ரகசியங்களை பெண்கள் கணவனிடம் கூட பகிர்ந்துக்கொள்ள கூடாது என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.

சாணக்கிய நீதி படி மனைவி கணவரிடம் செல்லவே கூடாத 3 ரகசியங்கள் என்னென்ன தெரியுமா? | Wife Does Not Share These Things With Her Husbandஅவ்வாறு பகிர்வதால் திருமண வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.அப்படி மனைவி கணவரிடம் சொல்லக்கூடாத ரகசியங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மாமியாரின் தவறுகள்

சாணக்கிய நீதி படி மனைவி கணவரிடம் செல்லவே கூடாத 3 ரகசியங்கள் என்னென்ன தெரியுமா? | Wife Does Not Share These Things With Her Husband

திருமணத்திற்குப் பின்னர் கணவனின் அம்மா செய்யும் தவறுகளை ஒருபோதும் கணவனிடம் சொல்ல கூடாது. 

மனைவியை பொருத்தவரையில் இவர் மாமியார் ஆனால் கணவனுக்கு  அம்மா என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

அம்மாவை பற்றி குறை கூறுவதை யாராலும் சகித்துக்கொள்ள முடியாது. மேலும் இவ்வாறு செய்வதால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உருவாகும். 

இதனால் இறுதியில் கணவன் மனைவி உறவிலும் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.எனவே இதனை பெண்கள் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். 

தானம்

சாணக்கிய நீதி படி மனைவி கணவரிடம் செல்லவே கூடாத 3 ரகசியங்கள் என்னென்ன தெரியுமா? | Wife Does Not Share These Things With Her Husbandபொதுவாகவே தானம் செய்வதை யாரிடமும் சொல்ல கூடாது. ஒரு கை செய்யும் தான தர்மத்தை மற்ற கை கூட அறியகூடாது என்பதே நியதி. 

தானம் செய்து விட்டு வெளியில் சொன்னால் இதன் பலனும் இப்போதே நீங்கிவிடும் என சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் பெண்கள் செய்யும் தானம் தொடர்பான விடயங்களை ஒருபோதும் கணவனிடம் பகிர்ந்துக்கொள்ள கூடாது. 

சேமிப்பு

சாணக்கிய நீதி படி மனைவி கணவரிடம் செல்லவே கூடாத 3 ரகசியங்கள் என்னென்ன தெரியுமா? | Wife Does Not Share These Things With Her Husband

மனைவி தனது கணவரின் அல்லது தனது சொந்த சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை நிச்சயம் சேமித்து வைக்க வேண்டும் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார். 

ஆனால் தான் பணத்தை சேமித்து வைத்திருப்பதை ஒருபோதும் கணவனிடம் பகிர்ந்துக்கொள்ள கூடாது.  இந்த பணம் குடும்பத்தின் கடினமான காலங்களில் நிச்சயம் பயன்படும்.

சேமிப்பை பற்றிய ரகசியத்தை கணவனிடம் சொல்வதால் சேமிப்பு ஏதாவது ஒரு வகையில் வீணாகிவிடும் என சாணக்கிய நீதியில் குறிப்பிடப்படுகின்றது.