நீண்ட காலமாகேவே நடிகர் விஜய் திரிஷா இருவரும் பழகி வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. பல போட்டோக்களும் வெளியாகின. ஆனால், அவர்கள் தரப்பில் இருந்து இதற்கு எந்தவித அதிகாரபூர்வ பதிலும் தரப்படவில்லை.
அதனை தவிர்த்தே வருகிறார்கள். இருப்பினும் பலரும், இது தொடர்பாக பல பேட்டிகளை அளித்து வருகிறார்கள். இந்த சூழலில் தான், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து மீண்டும் சர்ச்சை கருத்துக்கள் எழுந்தன.
இது தொடர்பாக சுசித்ரா சில கருத்துக்களை தெரிவித்தார். அதுவும் சமூகவலைத்தளத்தில் கவனிக்கப்பட்டது. இந்த சூழலில் தான் சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திரிஷா தனது சமூகவலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நீங்கள் ஏதேனும் ஒன்றை தவிர்க்க நினைத்தால் உங்களை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டு கொள்ளாதீர்கள் என பதிவிட்டுள்ளார் திரிஷா. இது அவர் சுசித்ராவிற்கு மறைமுகமாக அளித்த பதில் என்றே கூறப்படுகிறது.