கடக ராசியில் சூரிய பகவான் சஞ்சரிக்க போவதால், அதிர்ஷ்டத்தினை அள்ளும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஜோதிடத்தை பொறுத்தவரையில், ஒவ்வொரு கிரகம், மற்றும் நட்சத்திரங்கள் பெயர்ச்சி, ராசி மாற்றம் இவை அனைத்தும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது.

அந்த வகைகளில் கோள்களின் அரசன் என்று கூறப்படுவதுடன், சக்தி வாய்ந்த கிரகமாகவும் சூரியன் இருக்கின்றது.

அந்த வகையில் ஜுலை 16ம் தேதி கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்க உள்ளார். குறித்த ராசியில் ஆகஸ்ட் 15ம் தேதி வரை இருப்பார். 

சூரியனின் இந்த சஞ்சாரத்தால், எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் என்று தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

சூரிய பெயர்ச்சி ஆடி மாத பலன்கள் 2024: அதிர்ஷ்டத்தினை அள்ளும் 3 ராசிகள் | Aadi Rasi Palan 2024 Sun Transit Good Luck Zodiac

சிம்மம்

சூரிய பகவானின் சஞ்சாரத்தினால் சிம்ம ராசியினருக்கு நன்மைகள் வருவதுடன், தொழில் சம்பந்தமான சுப பலன்களையும் காண்பார்கள். வருமானம் அதிகரிக்கும்... எல்லா துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.

வருமானத்திற்கான ஆதாரங்கள் கிடைப்பதுடன், பணம் எப்பொழுதும் பாக்கெட்டில் நிரம்பி வழியுமாம். மகிழ்ச்சியான சூழ்நிலை குடும்பத்தில் நிறைந்திருக்கும்.

சூரிய பெயர்ச்சி ஆடி மாத பலன்கள் 2024: அதிர்ஷ்டத்தினை அள்ளும் 3 ராசிகள் | Aadi Rasi Palan 2024 Sun Transit Good Luck Zodiac

விருச்சிகம்

சூரிய பகவான் சஞ்சாரத்தால் விருச்சிக ராசியினருக்கு நல்ல லாபம், எதிர்பாரா பணவரவு பெறுவதுடன், நிதிநிலையும் மேம்படுமாம்.

ஷேர் மார்க்கெட் மற்றும் வெளியூர் சம்பந்தமான வேலைகளில் அதிக லாபம் பெறுவதுடன், அனைத்து துறைகளிலும் வெற்றி பெற வாய்ப்பும் உள்ளது.

சூரிய பெயர்ச்சி ஆடி மாத பலன்கள் 2024: அதிர்ஷ்டத்தினை அள்ளும் 3 ராசிகள் | Aadi Rasi Palan 2024 Sun Transit Good Luck Zodiac

மீனம்

சூரிய பகவானின் சஞ்சாரம் மீன ராசியினருக்கு பொன்னான நாட்களாக இருக்குமாம். இந்த காலக்கட்டத்தில் பண வரவு அதிகரிப்பதுடன், தந்தை வழியில் உள்ள செல்வம் கூட வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

உங்களது நிதி வலுவாக இருப்பதுடன், நீங்கள் செய்யும் தொழிலில் உச்சத்தை அடையலாம். செல்வ வளர்ச்சிக்கு பல ஆதாயங்கள் கிடைக்கும். உங்களது காதல் வாழ்க்கை வெற்றியை பெறலாம்.   

சூரிய பெயர்ச்சி ஆடி மாத பலன்கள் 2024: அதிர்ஷ்டத்தினை அள்ளும் 3 ராசிகள் | Aadi Rasi Palan 2024 Sun Transit Good Luck Zodiac