நம்மில் பலரும் இன்ஸ்டாகிராம் உபயோகிக்கிறோம். அதில் நம்மை யாரேனும் ப்ளொக் செய்து விட்டார்கள் என்பதை எவ்வாறு தெரிந்துகொள்வது?

உங்களை ஒருவர் இன்ஸ்டாவில் ப்ளொக் செய்துவிட்டால், உடனே இன்னொரு அக்கவுண்டில் இருந்து சம்பந்தப்பட்ட நபரைத் தேடுங்கள். ஒருவேளை அவர் தேடும்பொழுது அவரது பெயர் வந்தால் அவர் உங்களை ப்ளொக் செய்திருக்கிறார் என்று அர்த்தம்.

அவரது இன்ஸ்டாக்ராம் ப்ரொபைலைப் பயன்படுத்தி நேரடியாக அவரது அக்கவுண்ட்டுக்கு தொடர்பை ஏற்படுத்தலாம்.

உங்களுடைய அக்கவுண்டை லொக் அவுட் செய்து விட்டு அதே லிங்கை மீண்டும் பாருங்கள். இப்போது அவரது ப்ரொபைலை உங்களால் பார்க்க முடிந்தால் அவர் உங்களை ப்ளொக் செய்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளவும்.

ஒரு பதிவில் குறிப்பிட்ட நபரை டெக் செய்து பாருங்கள். டெக் செய்ய முடியாவிட்டால் அவர் உங்களை ப்ளொக் செய்திருக்கிறார்.

அவரது செட் ஹிஸ்ட்ரியை சோதிக்கவும். அதில் புதிய குறுந்தகவல்கள் எதுவும் லோட் ஆகாமல் இருந்தால் அவர் உங்களை ப்ளொக் செய்திருக்கலாம்.

அவரது ப்ரொபைலுக்கு அருகில் following என்ற ஒப்ஷனிலிருந்து followவிற்கு மாறினால் அவர் உங்களை ப்ளொக் செய்துள்ளார்.