இந்து மதத்தில் லட்சுமி தேவிக்கு என தனியிடம் உள்ளது.

இவர் செல்வம், புகழ் மற்றும் செழிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையவர்.

மகா லட்சுமியின் ஆசீர்வாதம் இருந்தால் பங்களா, சொத்து என செழிப்பாகன வாழலாம்.

மற்ற தெய்வங்களை வழிபடுவதை விட லட்சுமி தேவியை வழிபட்டால் பொருளாதார நெருக்கடிகள் நீங்கும்.

வெள்ளிக்கிழமையில் மறக்காமல் இத செஞ்சா போதும்..வறுமையே வராது- செய்து பாருங்க | Lakshmi Devi Pooja On Every Friday

அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி தேவியை வணங்கினால் வறுமை நீங்கி செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

அந்த வகையில் வெள்ளிக்கிழமைகளில் என்ன செய்தால் கஷ்டம் வராது? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

 1. வெள்ளிக்கிழமைகளில் காலை எழுந்து குளித்து விட்டு சிவப்பு துணியில் லட்சுமி தேவியின் படம் அல்லது சிலையை வைக்கவும். அதில் ஸ்ரீ யந்திரத்தையும் வைக்க வேண்டும். பின்னர் நெய் தீபம் ஏற்றி ஸ்ரீ யந்திரம் மற்றும் லட்சுமி தேவிக்கு அஷ்ட கந்தம் திலகமாக கொடுக்கப்பட வேண்டும்.

வெள்ளிக்கிழமையில் மறக்காமல் இத செஞ்சா போதும்..வறுமையே வராது- செய்து பாருங்க | Lakshmi Devi Pooja On Every Friday

 2. வடகிழக்கு திசையில், லட்சுமி தேவியை அமர வைத்து வழிபடவும். தொழுகை நடக்கும் நேரத்தில் அருகில் சமையலறை அல்லது கழிவறை இருக்கக் கூடாது.

3. லட்சுமி தேவிக்கு பிடித்தமான தாமரை மலர், சங்கு, சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு துணி உள்ளிட்டவைகளை பூஜை அறையில் வைக்கவும். இது நிதி சிக்கல்களை நீக்கி செல்வ செழிப்புடன் வாழ வைக்கும்.

வெள்ளிக்கிழமையில் மறக்காமல் இத செஞ்சா போதும்..வறுமையே வராது- செய்து பாருங்க | Lakshmi Devi Pooja On Every Friday

4.வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து குடும்பமாக சேர்ந்து சாப்பிடவும். இப்படி செய்து வந்தால் வீட்டில் பண புழக்கம் அதிகரிக்கும்.

5. தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிக்க வைக்க வேண்டும். இப்படி செய்தால் வீட்டில் லக்ஷிமி நித்தமும் வாசம் செய்வாள்.