பொதுவாக காதலில் விழுந்தவர்கள் காதலிப்பவர்களை கரம் பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் தான் காதலிக்கவே ஆரம்பிப்பார்கள்.
ஆனால் சிலரின் வாழ்க்கையில் அது நடக்காமலேயே சென்று விடுகிறது.
ஜாதி, மதம், போட்டி, பொறாமை, வயது இப்படியான பல காரணங்களால் காதல் பயணம் இடையிலே முடிந்தும் விடுகிறது.
தான் காதலித்தவர்கள் தன்னை விட்டு சென்று விட்டால் அத்தோடு நம்முடைய வாழ்க்கை முடிந்து விட்டது என்றதல்ல. வாழ்க்கை நம்முடையது யார் வந்தாலும் சென்றாலும் அதனை ஏற்றுக் கொண்டு வாழ பழகிக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில், அடிக்கடி காதலில் அடி வாங்கிக் கொண்டு இனி வாழ்க்கையே இல்லை என சுற்றித்திரிவதற்கென சில ராசியினர் இருக்கிறார்கள்.
அப்படியான ராசிக்காரர்கள் யாவர்? அவர்களின் வாழ்க்கையில் வேறு என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும்? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

1. கடக ராசிக்காரர்கள்
கடக ராசியில் பிறந்தவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் பாதியை குடும்ப வாழ்க்கைக்காக அர்ப்பணிப்பார்கள். இவர்கள் காதலில் விழுந்து விட்டால் தன்னுடைய துணைக்கு உண்மையாக நடந்து கொள்வார்கள்.
ஏதோவொரு சந்தர்ப்பத்தில் துணை பிரிந்து விட்டால் அவருடன் வாழ்ந்த நினைவுகளை எண்ணி அடுத்து வரும் நாட்களை கடத்திச் செல்லும் இயல்புக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

2. மேஷ ராசிக்காரர்கள்
ஆழ்ந்த உணர்ச்சிக் கொண்ட ராசிக்காரர்களில் மேஷ ராசிக்காரர்களும் ஒருவர். இவர்களின் காதல் உண்மையானதாக இருக்கும்.
தன்னுடைய துணையை தீவிரமாக நேசிக்கும் பொழுது வேறு எதனையும் கவனத்தில் கொள்ளமாட்டார்கள். இவர்களை காதலில் இருந்து பிரிப்பது என்பது சாதாரணமாக இருக்காது.

3. மகர ராசிக்காரர்கள்
கற்பனையில் ஆறுதல் தேடும் ராசிக்காரர்களில் இவர்களும் ஒருவர். இவர்கள் தன்னுடைய துணையால் வலியை ஒரு தடவை அனுபவித்து விட்டால் என்ன நடந்தாலும் அதனை மன்னிக்கமாட்டார்கள். இதனை காரணமாக வைத்து அவர்களின் துணை விலகிப் போக வாய்ப்பு இருக்கிறது.

