பொதுவாக உலகில் அனைவருமே பணப்பிரச்சினை இன்றி ஆரோக்கியமான உடலுடன் நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தான் ஆசைப்படுகின்றார்கள்.
ஆனால் ஆசைப்படும் எல்லோருக்கும் அப்படியான வாழ்வு அமைந்துவிடுவதில்லை. சில வீடுகளில் அடிக்கடி பணப்பிரச்சினைகள், ஆரோக்கிய குறைப்பாடுகள் வந்து கொண்டே இருக்கும்.
சில வீடுகளில் எவ்வளவு உழைத்தாலும் காசு மிச்சமில்லாமல் போகலாம்? அதற்கு என்ன செய்வது என தெரியாமல் புலம்புபவர்கள் ஏராளம்.இது போன்ற நேரங்களில் வாஸ்துவை சரி பார்க்க வேண்டியது மிகவும் அவசியம்.
வாஸ்து வாஸ்திரத்தின் அடிப்படையில் வீட்டின் கதவு நன்றாக இருந்தாலே எதிர்மறை சக்தி வீட்டிற்குள் நுழையாது என குறிப்பிடப்படுகின்து. அந்த வயைில் வீட்டின் கதவை எவ்வாறு வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம்.
குறிபப்பாக வீட்டில் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் இருந்துக்கொண்டே இருந்தால் வீட்டின் பிரதான கதவில் பூக்களை வைப்பது வீட்டில் நேர்மறை ஆற்றல்களை ஈர்ப்பதன் மூலம் மகிழ்ச்சியை அதிகரிக்க முடியும்.
வீட்டின் பிரதான கதவில் மா இலைறை தொங்கவிடுவது அதிர்ஷ்டம்தை கொண்டுவரும். கதவில் கடவுள் புகைப்படம் பொறிப்பது, ஒட்டுவது போன்ற விடயங்கள் வாஸ்து பிரகாரம் மிகவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகின்றது.
வீட்டின் பிரதான கதவு ஈயம், வேம்பு, சந்தனம் போன்ற மரங்களில் தயாரிக்கப்பட்டதாக இருந்தால் வீட்டில் செல்ல செழிப்புக்கு பஞ்சமே இருக்காது.
வாஸ்து சாஸ்திர அடிப்படையில் வீட்டின் கதவை இரு கைகளாலேயே திறக்க வேண்டும்.மேலும் வீட்டின் கதவை எப்போதும் திறந்துவைத்தால் செல்வம் அழிந்துவிடும் என்று நம்பப்படுகின்றது. காலை சில மணி நேரம், மாலை சில மணி நேரம் மட்டுமே பிரதான கதவை திறந்து வைக்க வேண்டும்.
எல்லா நேரங்களிலும் கதவை திறந்து வைப்பது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும். இதனால் வீட்டில் பிரச்சினைகள் அதிகரிக்கும். மேலும் வீட்டின் கதவில் ஒருபோதும் சத்தம் வரவிட கூடாது.
சரி இல்லாத கதவுகளை உடனடியாக மாற்றிவிடுவது முக்கியம். வீட்டின் கதவில் லட்சுமி தேவி வாசம் செய்வதால் தினமும் கதவை துடைத்து சுத்தமான வைத்திருக்க வேண்டும். இவ்வாறு கதவை பராமரிப்பது செல்வத்தை அதிகரிக்கச் செய்யும்.