இந்துக்களின் மிக முக்கியமான விரத நாட்களில் ஒன்று ஏகாதசி விரதம். திதிகளில் 11 வது திதியாக வரும் ஏகாதசி, பெருமால் வழிபாட்டிற்குரிய புண்ணிய விரத நாளாகும். வளர்பிறை, தேய்பிறை என மாதத்திற்கு இரண்டு முறை ஏகாதசி விரதம் வருவது உண்டு

ஏழு தலைமுறை பாவம் போக்க ஏகாதசி விரதம் ; இன்று விரதம் எடுப்பதால் இத்தனை நன்மைகளா? | Aati Matha Yegathasi Virathathin Palankal

இந்த ஆண்டு ஆடி மாதத்தில் மிக அரிதாக ஆடி மாதத்தில் மூன்று ஏகாதசிகள் வருகின்றன. ஆடி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு காமிகா ஏகாதசி என்ற பெயர். இந்த ஆண்டு காமிகா ஏகாதசி ஜூலை 31ம் திகதி புதன்கிழமை வருகிறது.

ஏழு தலைமுறை பாவம் போக்க ஏகாதசி விரதம் ; இன்று விரதம் எடுப்பதால் இத்தனை நன்மைகளா? | Aati Matha Yegathasi Virathathin Palankal

காமிகா ஏகாதசி விரதம் இருப்பதால் பல புண்ணிய நதிகளில் நீராடிய பலனும், அஸ்வமேத யாகம் செய்த பலனும், பசு தானம் வழங்கிய பலனும், யாகங்கள் போன்ற புண்ணிய ஆன்மிக சடங்குகள் நடத்திய பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

காமிகா ஏகாதசி விரதத்தை பக்தியுடன் படைபிடிப்பதும், அன்றைய தினம் விஷ்ணு வழிபாட்டினை செய்வதாலும் அளவில்லாத புண்ணிய பலன்கள் விரதம் இருப்பவருக்கு மட்டுமின்றி, அவரது பல தலைமுறையினருக்கும் கிடைக்கும்.

ஏழு தலைமுறை பாவம் போக்க ஏகாதசி விரதம் ; இன்று விரதம் எடுப்பதால் இத்தனை நன்மைகளா? | Aati Matha Yegathasi Virathathin Palankal

இந்த விரதம் இருப்பவர்களின் பாவங்கள், பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, பெருமாளின் திருவருளால் அவர்கள் வேண்டிய அனைத்தும் கிடைக்கும்.

காமிகா ஏகாதசி அன்று எவர் ஒருவர் விரதம் இருந்து பெருமாளை வழிபடுகிறார்களோ, இந்த விரதத்தால் அவரது முன்னோர்கள் மனம் மகிழ்ச்சி அடைந்து அவர்களின் ஆன்மாக்கள் அவர்களின் சந்ததிக்கு ஆசியை வழங்குவதாக நம்பிக்கை.

ஏழு தலைமுறை பாவம் போக்க ஏகாதசி விரதம் ; இன்று விரதம் எடுப்பதால் இத்தனை நன்மைகளா? | Aati Matha Yegathasi Virathathin Palankal

இதனால் வாழ்க்கையில் ஏற்படும் பித்ரு சாபம், பித்ரு தோஷம், பிரச்சனைகளை நீக்குகிறது. இந்த நாளில் காமிகா ஏகாதசியின் கதையை கேட்பதும் கூட யாகம் செய்த பலனை தரும் என சொல்லப்படுகிறது.

இந்த விரதத்தை இருப்பவர்களுக்கு முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசி கிடைக்கும். வழக்கமாக மற்ற ஏகாதசிகளில் விரதம் இருந்தால் விரதம் இருப்பவரின் பாவம் நீங்கி, மோட்சம் கிடைக்கும் என்பார்கள்.

ஆனால் காமிகா ஏகாதசியில் விரதம் இருந்து வழிபட்டால் அவரின் ஏழு தலைமுறையினரின் பாவங்கள் நீங்கி, மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஏழு தலைமுறை பாவம் போக்க ஏகாதசி விரதம் ; இன்று விரதம் எடுப்பதால் இத்தனை நன்மைகளா? | Aati Matha Yegathasi Virathathin Palankal