ஆடி மாதம் அம்பாளுக்கு உரிய மாதமாக பார்க்கப்படுகின்றது.

இந்த மாதத்தில் வரக்கூடிய அனைத்து நாட்களும் விசேஷ நாளாக தான் இருக்கும்.

இதன்படி, ஆடி மாதத்தில் ஆடி பெருக்கு பண்டிகை மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இந்த நாட்களில் சிலர் விரதம் இருந்து வழிபடுவார்கள். இது அவர்களுக்கு ஏகப்பட்ட பலன்களை எடுத்துக் கொடுக்கும்.

ஆடி பெருக்கு பண்டிகையின் போது இத செய்ய மறக்காதீங்க- ஜென்ம ஜென்மத்தின் பலன் | Do And Donts For Aadi Peruku Aadi 18

அத்துடன் இந்த நாளில் ஆறுகளில் புது வெள்ளம் பாயும் என்பார்கள். இதனால் அந்த நாளில் எது வாங்கினாலும் பலமடங்கு பெருகும் என்பது பலரின் ஐதீகமாக உள்ளது.

அந்த வகையில், ஆடி 18 தினங்களில் என்ன வாங்கலாம்? என்ன செய்யனும் செய்யக்கூடாது? என்பதை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

1. விவசாயத்தை வாழ்வாதாரத் தொழிலாக செய்பவர்கள் காவிரித்தாயை நினைத்து பூ, பழம் வைத்து வணங்க வேண்டும். இதனால் உங்களுக்கு சிறந்த நீர்வளம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

ஆடி பெருக்கு பண்டிகையின் போது இத செய்ய மறக்காதீங்க- ஜென்ம ஜென்மத்தின் பலன் | Do And Donts For Aadi Peruku Aadi 18

2. ஆடிப் பெருக்கு மங்களகரமான நாள் என்பதால் அன்றைய தினத்தில் என்ன பொருள் வாங்கினாலும் அது வீட்டில் பெருகும். இந்த நாளில் நமது வசதிக்கு ஏற்ற பொருட்களை வாங்கினால் பலன் பெறலாம்.

3. இந்த நாளில் தங்கம் அல்லது வெள்ளி வாங்கலாம். ஆடி பெருக்கு தினத்தில் இப்படியான பொருட்கள் வாங்கினால் மென்மேலும் பெருகி நம்முடைய வறுமையை நீக்கும்.

ஆடி பெருக்கு பண்டிகையின் போது இத செய்ய மறக்காதீங்க- ஜென்ம ஜென்மத்தின் பலன் | Do And Donts For Aadi Peruku Aadi 184. ஆடி 18 தினத்தில் தங்கம் வாங்க முடியாதவர்கள் புதிதாக மஞ்சள் கிழங்கு வாங்கி வைக்கலாம். இப்படி செய்தால் வீட்டில் மகாலட்சுமியின் அருள் நிறையும். சிலர் தாலி கயிற்றில் மஞ்சள் கட்டிக் கொள்வார். ஏனெனின் மஞ்சள் தங்கத்திற்கு இணையானது.

5. சிலர் ஆடி 18ஆம் தினத்தில் உப்பு வாங்குவார்கள். இதற்கு காரணமும் மகாலட்சுமி வரவு தான். மகாலட்சுமி, குபேரனின் முக்கிய அம்சமாக உப்பு பார்க்கப்படுகிறது.இந்த தினத்தில் உப்பு வாங்கி வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும்.