பொதுவாகவே அனைவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமாக இடத்தை பெறுகின்றது.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அதிர்ஷ்டம் நிறைந்ததாகவும் இருப்பதும் அல்லது சவால்கள் மற்றும் துரதிஷ்டம் நிறைந்ததாக இருப்பதும் எப்படிப்பபட்ட வாழ்க்கை துணையை பெறுகின்றோம் என்பதிலேயே தங்கியிருக்கின்றது.
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் திருமண உறவிலும் சரி காதல் உறவிலும் சரி நீண்ட காலம் நிலைத்திருக்கமாட்டார்களாம்.
இவர்களின் திருமண வாழ்க்கை அதிக துன்பங்கள் மற்றும் போராட்டங்கள் நிறைந்ததாகவே இருக்கும் அப்படி பெரும்பாலும் திருமணத்ததால் துரதிஷ்டத்தை அனுபவிக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சுதந்திர உணர்வுக்கும் சுயநலத்துக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் சொந்த லாபம் இல்லாமல் யாருக்கும் உதவி செய்ய மாட்டார்கள். மற்றவர்களை அடக்கியாளும் தன்மையை அதிகம் கொண்ட இவர்களுக்கு விசுவாசம் என்பதே சுத்தமாக இருக்காது.
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் இவர்களின் திருமண வாழ்கை மிகுந்த போராட்டம் மற்றும் பிரச்சினைகள் நிறைந்ததாக இருக்கும்.
இவர்கள் மற்றவர்களிடம் விரைவாக பழகும் தன்மையை கொண்டிப்பார்கள் ஆனால் எந்த உறவிலும் அதிக நாட்கள் நிலைத்திருக்க மாட்மார்கள்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே அதிக சந்தேக குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தங்கள் துணைக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் காணப்படும் அதிகப்படியான சந்தேக குணம் அவர்களின் உறவில் பல பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.
திருமணத்தின் பின்னர் இவர்களின் சந்தேக குணம் இவர்களுக்கு மிகப்பெரிய எதிரியாக மாறிவிடும். இதனால் திருமண வாழ்வில் அதிக சண்டை சச்சரவுகள் ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் காதல் உறவிலும் திருமணத்திலும் துணையின் மீது அதிக அன்பு கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்களுக்கு உறவுகளிடம் நீடித்து இருக்கும் தன்மை மிகவும் குறைவாகவே இருக்கும்.
இவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் பழக்கம் மிகவும் அரிதாகவே இருக்கும். அதனால் திருமண வாழ்க்கை சவால்கள் நிறைந்ததாக இருக்கும்.