காலை நேர உணவாக ஆனியன் ஓட்ஸ் தோசை வெறும் 15 நிமிடத்தில் எவ்வாறு தயார் செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். 

பொதுவாக ஓட்ஸ் உணவானது நார்ச்சத்து நிறைந்ததாகும். ஆரோக்கியம் நிறைந்த உணவான இவற்றினை மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.

உடம்பை ஃபிட்டாக இருக்க நினைப்பவர்களுக்கு இந்த ஆனியன் ஓட்ஸ் தோசை சிறந்த தேர்வாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 1 கப்
வெள்ளை ரவை - 1/2 கப் 
அரிசி மாவு - 1/2 கப் 
புளித்த தயிர் - 2 டேபிள் ஸ்பூன் 
தண்ணீர் - 2 கப் + 1 1/2 கப் 
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 
கறிவேப்பிலை - 2 கொத்து (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1/2 இன்ச் (பொடியாக நறுக்கியது)
சீரகம் - 1/2 டீஸ்பூன் 
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன் 
கொத்தமல்லி - 1 கைப்பிடி
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை:

வாணலி ஒன்றினை அடுப்பில் வைத்து, அதில் ஒரு கப் ஓட்ஸ் சேர்த்து 3 அல்லது 4 நிமிடங்கள் போட்டு நன்றாக வறுக்கவும்.

பின்பு சூடு ஆறிய பின்பு மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். இந்த பொடியுடன், ரவை, அரிசி மாவு, புளித்த தயிர், தண்ணீர் இவற்றினை ஊற்றி நன்றாக கிளறிவிட்டு, 10 நிமிடம் ஊற வைக்கவும்.

Onion Oats Dosa: வெறும் 15 நிமிடத்தில் சத்தான ஆனியன் ஓட்ஸ் தோசை | How To Make A Onion Oats Dosa Recipe

10 நிமிடம் கழித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், பெருங்காயத் தூள், கொத்தமல்லி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, மீண்டும் 1 1/2 கப் நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். 

பின்பு தோசை கல்லினை அடுப்பில் வைத்து தோசை ஊற்றி எடுக்கவும். தற்போது சுவையான ஆனியன் ஓட்ஸ் தோசை தயார்.