கனவு சாஸ்திரத்தின் பிரகாரம் நமது ஆழ்மன எண்ணங்களுக்கும் கனவுகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.

மனிதர்களாக பிறந்த அனைவரும் வாழ்வில் ஒரு முறையேனும் நிச்சயம் கனவு கண்டிருப்பார்கள். அப்படி கனவில் காணும் விடயங்கள் அப்படியே நிஜத்தில் நமக்கும் என்று அர்த்தம் கிடையாது.

கனவில் கடவுள் உருவங்கள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? | What Does It Mean If God Appears In Your Dream

ஆனால் நாம் காணும் கனவுகள் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நன்மை மற்றும் தீமைகளை முன்கூட்யே உணர்த்தும் ஒரு எச்சரிக்கை மணி போல் செயற்படுகின்றது.

அந்த வகையில் கடவுள் பற்றிய கனவுகள் சாஸ்திரங்களின் அடிப்படையிலும், கனவு அறிவியலின் அடிப்படையிலும் மிகவும் மங்களகரமாகதாக பார்க்கப்படுகின்றது. 

எனவே கனவுகளில் எந்த கடவுளின் உருவங்கள் அல்லது சின்னங்கள் வந்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம். 

கனவில் கடவுள் உருவங்கள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? | What Does It Mean If God Appears In Your Dreamகனவில் சிவன் வந்தால் நம் வாழ்வில் நமக்கான அங்கிகாரம் விரைவில் கிடைக்கப்போகின்றது என்று அர்த்தம்.  

சிவலிங்கத்தின் தோற்றம் கனவில் வந்தால்,  வாழ்க்கையில் இதுவரையில் சந்தித்த மொத்த பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கப்போகின்றது என்பதன் முன்கூட்டிய அறிவிப்பாக இதனை எடுத்துக்கொள்ளலாம். 

கனவில் கடவுள் உருவங்கள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? | What Does It Mean If God Appears In Your Dream

சிவன் பற்றிய கனவுகள் பணம் மற்றும் செல்வாக்கை அதிகரிக்கும் என்பது ஐதீகம். 

முருகன் வந்தால் நாம் நினைத்த காரியம் கைகூடும் என்று நம்பப்படுகின்றது. சகல ஐஸ்வர்யங்களும்  எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்கப்போகின்றது என்று அர்த்தம். 

முருகன் கனவில் வந்தால் நடப்பவை அனைத்தும் நன்மையில் முடியும். உங்கள் ஜாதகத்தில் ஏற்பட்டுள்ள தோஷங்கள் நிவர்தியாகும் என்று பொருள்.இது நல்ல மாற்றத்துக்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகின்றது. 

கனவில் கடவுள் உருவங்கள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? | What Does It Mean If God Appears In Your Dream

கனவில் விநாயகர் வந்தால் நாம் புதிதாக தொடங்கும் வேலைகள் எந்தவித தடைகளும் இன்றி மிகவும் சிறப்பாக நடைபொறும் என்று அர்தம். வாழ்வில் புதிய அத்தியாயம் ஆரம்பிக்கப்போவதன் அறிகுறியாகவும் இதனை எடுத்துக்கொள்ளலாம். 

அது போல் கனவில் விஷ்ணு பகவான் வந்தால் வாழ்வில் செல்வ செழிப்பு அதிகரிக்கப்போகின்றது என்றே அர்த்தம்.

அம்பாள் அல்லது ஏதேனும் பெண் தெய்வங்கள் கனவில் வந்தால்,  வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறப்போகின்றது என்று அர்த்தம்.

கனவில் கடவுள் உருவங்கள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? | What Does It Mean If God Appears In Your Dream

குலதெய்வம் கனவில் வந்தால் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதாகவே பார்க்கப்படுகின்றது. 

யானை துரத்துவது போல கனவு கண்டால் விநாயகருக்கு செலுத்த வேண்டிய நேர்த்திக்கடன் பாக்கி இருக்கின்றது என்பதே பொருள். 

கனவில் கடவுள் உருவங்கள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? | What Does It Mean If God Appears In Your Dream

கோவில் கோபுரம் வந்தால் பூர்வ ஜென்ம பாவங்களில் இருந்து விடிவு காலம் வந்துவிட்டது என்பதும்  இனிமேல் வாழ்கை சுபீட்சமாக அமையப்போகின்றது என்பதுமே அர்த்தம்.