பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் செல்வ செழிப்புடன் மகிழ்சியாக வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமானவது கிடையாது அதற்கு என்ன காரணம் என்று சிந்தித்திருக்கின்றீர்களா?
உண்மையில் நமது ஆழ்மன எண்ணங்களுக்கும் இந்த பிரபஞ்ச சக்திக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. பிரபஞ்சத்துக்கு உணர்வுகள் மூலம் வெளிப்படுகின்ற அதிர்வுகள் மட்டுமே புரியும் என்று சொல்லலாம்.
நாம் எவ்வளவு மகிழ்சியான மனநிலையுடன் ஒரு விடயம் குறித்து தினசரி நினைக்கின்றோமோ அதனை நிச்சயம் இந்த பிரபஞ்சம் நம்மிடம் சேர்த்துவிடும். அந்த ஆற்றல் இயற்கைக்கு காணப்படுகின்றது.
அப்படி பிரபஞ்சத்துடனான தொடர்பு நமக்கு ஏற்பட்டுவிட்டால், அடிக்கடி 11:11என்ற எண்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் இதற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் தொடர்பில் முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம்.
11:11 என்ற எண் Angel Number என்று குறிப்பிடப்படுகிறது.அதனை அடிக்கடி பார்க்கின்றீர்கள் என்றால், மிகப்பெரிய ஆற்றல் உங்களை வழிநடத்துகின்றது என்பதே அதன் அர்த்தம்.
எண் கணித சாஸ்திரத்தின் பிரகாரம், எண் 11 ஒரு "மாஸ்டர் எண்ணாக பார்க்கப்படுகின்றது. இது உள்ளுணர்வு, ஆன்மீக நுண்ணறிவு ஆகியற்றுடன் தொடர்புப்படுகின்றது.
இந்த எண்ணை மீண்டும் மீண்டும் பார்ப்பது பிரபஞ்சத்தின் ஆற்றலுடன் உங்களின் எண்ணங்களுக்கு தொடர்பு ஏற்பட்டுட்டுள்ளது என்பதையே வலியுறுத்துகின்றது.
நீங்கள் நினைப்பதை ஈர்கப்போகின்றீர்கள் எனவே உங்களின் எண்ணங்களை சீர் செய்துக்கொள்ள வேண்டும்.
இது பெரும்பாலும் தற்செயலாகத் தோன்றும், ஆனால் அது பிரபஞ்சத்தின் ஆற்றல் எமக்கு உணர்த்தும் முக்கிய மற்றும் ஆழமான அறிகுறியாகும்.
ஏனெனில், இது பிரபஞ்சம் உங்கள் ஆசைகளை ஏற்றுக்கொள்ளும் தருணம் என்று நம்பப்படுகிறது.
அதனால் இந்த எண்களை அடிக்கடி காண்கின்றீர்கள் என்றால், நேர்மறையான ஆசைககள் மற்றும் தேவைகளை மகிழ்ச்சியுடன் மீண்டும் மீண்டும் நினைத்துப் பாருங்கள்.
மேலும் இந்த எண்கள் அடிக்கடி உங்கள் கண்களில் படுகின்றது என்றால், நீங்கள் சரியாக பாதையில் செல்கின்றீர்கள். உங்கள் எதிர்காலம் சுபீட்சம் நிறைந்ததாக இருக்கப்போகின்றது என்று அர்த்தம்.