தற்போது இருக்கும் அவசர உலகில் அதிகாலையில் சீக்கிரமாக எழுந்து குளிக்க முடியாத நிலை அதிகரித்து வருகின்றது. இதனால் பெரும்பாலானவர்கள் தலைக்கு குளிப்பதை காலையில் தவிர்த்து கொள்கிறார்கள்.
அதுமட்டுமின்றி அலுவலகம் முடிந்து திரும்பி வந்த பிறகு தலைக்கு குளிப்பதை புத்துணர்ச்சியாக உணர்கிறார்கள்.
இரவு தூங்குவதற்கு முன்னர் தலைக்கு குளிப்பதால் ஏகப்பட்ட பக்க விளைவுகள் ஏற்படும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
நேரத்தை மிச்சப்படுத்துவதற்கான இப்படி தவறான பழக்கத்தை தொடர்ந்து செய்து வந்தால் நாள்ப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. “இரவில் தலைமுடியைக் கழுவுவதை ஏன் தவிர்க்க வேண்டும்” என நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
அப்படியாயின் ஏன் இரவில் தலைக்கு குளிப்பதை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. இரவில் தலைக்கு குளிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு பாதுகாப்பு தடை பலவீனப்படுத்துகிறது, இதனால் தலைமுடி காலப்போக்கில் உடைய ஆரம்பித்து, உதிர்வு அதிகப்படுத்தும்.
2. ஈரமான முடியுடன் படுக்கைக்கு செல்லும் பொழுது உச்சந்தலையில் ஈரப்பதம் இருக்கும். இதன் விளைவாக தலையில் எரிச்சல், சிவத்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அத்துடன் இரவில் வெள்ளை செதில்கள் மற்றும் பொடுகு வளர்ச்சி ஊக்கவிக்கப்படுகின்றது.
3. தலைக்கு ஷாம்பு போட்டு குளித்த பின்னர் வழக்கமாக தலைமுடி உதிர்வு இருக்கும். அதே சமயம், ஈரமான தலைமுடியுடன் இருக்கும் பொழுது தலையணையில் தேய்வு ஏற்பட்டு தலைமுடி உதிர்வு அதிகமாகும்.
4. தூங்குவதற்கு முன் குளித்து விட்டு தூங்கினால் காலையில் சுத்தமான மற்றும் பிரகாசமான கூந்தலை பெறலாம் என பலரும் நினைத்து கொண்டிருப்பார்கள். ஆனால் உண்மையில், தலைமுடியை ஈரத்துடன் வைத்திருந்தால் தலைமுடியில் வழுவழுப்பு ஏற்பட்டு பிசுபிசுவென காட்சியளிக்கும்.
5. இரவில் தலைக்குக் குளிப்பது தற்காலிக புத்துணர்ச்சி கிடைத்தாலும் ஈஸ்ட் மற்றும் பூஞ்சை தொற்று ஏற்படலாம். இது போன்ற சமயங்களில் சிறிய பூச்சிகள் இனப்பெருக்கம் செய்ய உகந்த சூழலாக மாறுகின்றது. இதனை தவிர்க்க வேண்டும் என்றால் இரவில் குளிப்பதை முற்றிலும் குறைக்க வேண்டும்.