சருமத்தை செயற்கை பொருட்களை கொண்டு அழகுபடுத்தும் போது உடனடி அழகை சருமம் பெற்றுக்கொடுக்கிறது. ஆனால் இது நிலையானது அல்ல.

இயற்கையில் காணப்படும் பல பொருட்களை கொண்டு சருமத்திற்கு அழகை சேர்க்கும் போது இது நமது அழகை மேன்படுத்துவதுடன் ஆரோக்கிய சருமத்தையும் கொடுக்கும்.

சருமத்தில் பருக்கள் அழுக்குகள் போன்றவை இல்லாமல் சருமம் கண்ணாடி போல ஜொலிக்க அதற்கேற்ற சத்துள்ள உணவுகளை நாம் சாப்பிட வேண்டும். 

உடலில் ரத்த ஓட்டத்தை சீராக கொண்டு செல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மிகவும் முக்கியம். இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் கொண்ட உணவுகள் எது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ள உணவுகள் உண்பதனால் அது பல சரும பிரச்சனைகளை தடுக்கிறது. இதனால் கண்ணாடி போல ஜொலிக்கும் சருமம் நமக்கு கிடைக்கும். இப்படி இருப்பதால் அழகிற்காக எந்த விதமான தேவையற்ற செலவும் இருக்காது.

புளுபெரி: புளுபெரியில் வைட்டமின் சி மற்றும் இ நிறைந்துள்ளது. இது நமது சருமத்தில் இறந்த கலங்களை அகற்றி சருமத்திற்கு ஒரு அழகிய பொலிவை கொடுக்கும். சருமம் மாசுக்களால் அழுக்கு படிந்திருந்தால் இந்த வைட்டமின் சி அதை இல்லாமல் செய்து முகத்திற்கு ஒரு அழகிய பொலிவை கொடுக்கும்.

கண்ணாடி போன்ற ஜொலிக்கும் சருமம் வேண்டுமா? இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் அவசியம் | Antioxidant Foods Help For Glowing Skin Beautyதக்காளி: தக்காளியில் லைகோபீன் என்ற பதார்த்தம் உள்ளது. இது வெயிலில் செல்லும் போது ஏற்படும் சன் டேன்பிரச்சனைகள் நீங்கும். 

தக்காளியை அதிகமாக சாப்பிடாமல் நாளுக்கு ஒன்று படி சாப்பிட்டு வருதல் மிகவும் நன்மை தரும். இதனால் சருமம் வெயில் படும் போது சூரிய கதிர்களில் இருந்து பாதிக்கால் இது தடுக்கும்.

மாதுளை: மாதுளையில் ஆன்டி ஆக்ஸிடனகள் அதிகமாக உள்ளது. இது சருமத்தை சுருங்க விடாமல் அழகாக வைத்துக்கொள்ளும். இதற்கு காரணம் இதில் நிறைந்திருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் தான். தினமும் மாதுளை சாப்பிடாவிட்டாலும் வாரத்திற்கு மூன்று தடவை இந்த பழத்தை சாப்பிட்டு வருவது நன்மை தரும்.

கண்ணாடி போன்ற ஜொலிக்கும் சருமம் வேண்டுமா? இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் அவசியம் | Antioxidant Foods Help For Glowing Skin Beautyவெண்ணெய் பழம்: இந்த பழத்தில் வைட்டமின் இ நிறைந்துள்ளது. வைட்டமின் கலவளர்ச்சிக்கு மிகவும் அவசியம். 

எனவே நமது சருமத்தில் இறந்த கலங்களை அகற்ற இந்த வைட்டமின் இ மிகவும் அவசியம். இதில் ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிறைந்து காணப்படுகின்றது. இது சருமத்தை பல தொற்றில் இருந்து பாதுகாக்கும்.

கண்ணாடி போன்ற ஜொலிக்கும் சருமம் வேண்டுமா? இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் அவசியம் | Antioxidant Foods Help For Glowing Skin Beautyடார்க் சாக்கலேட்: சருமத்தில் வயது செல்ல செல்ல சில கோடுகள் சுருக்கங்கள் ஏற்படும். இந்த சுருக்கங்கள் கோடுகள் ஏற்படாமல் இந்த டார்க் சாகலேட் பாதுகாக்கிறது. எனவே டார்க் காகலேட் சாப்பிட்டு வருவது மிகவும் நன்மை தரும்.