இந்து மதத்தை பொருத்தவரையில் ருத்ராட்சம் என்பது தெய்வீக தன்மை பொருந்திய முக்கிய பொருளாக பார்க்கப்படுகின்றது. 

ஏனெனில், ருத்ராட்சம் என்பது சிவனின் ஒரு வடிவமாகவே இந்துக்கள் கருதுகின்றார்கள். சிவ பெருமானின் கண்ணீரில் இருந்து ருத்ராட்ச மரம் உருவானது என்பது நம்பிக்கை.

ருத்ராட்சம் அணிபவரா நீங்க? போலியை கண்டறிய எளிய வழிகள் இதோ... | How To Identify The Fake Rudrakshaஅதனை மதம் சார்ந்த பொருளாக பார்ப்பதை விடுத்து அறிவியல் ரீதியாக பார்ப்பதன் மூலம் இந்துக்கள் மாத்திரமன்றி ஏனையோரும் அதன் பயன்கனை அடையக் கூடியதாக இருக்கும்.

அறிவியலின் படி இயற்யையாகவே சில பொருட்களுக்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்க கூடிய சக்தி இருக்கின்றது, அந்தவகையில் இந்த ஆற்றல் ருத்ராட்சத்துக்கு அதிகளவில் இருப்பதாக அறிவியல் ஆதாரங்களும் காணப்படுகின்றது. 

ருத்ராட்சம் அணிபவரா நீங்க? போலியை கண்டறிய எளிய வழிகள் இதோ... | How To Identify The Fake Rudraksha

இந்த ரகசியம் தெரிந்தே நமது முன்னோர்களும் சித்தர்களும் ருத்ராட்சத்தை ஒரு ஆபரணமாக  அணிவதை வழக்கமாக்கிக வைத்திருக்கின்றார்கள்.

தற்காலத்திலும் பெரும்பாலானவர்கள் மத்தியில் ருத்ராட்சம் அணியும் வழக்கம் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது. சிலர் ருத்ராச்சத்தை மத நம்பிக்கைகளின் அடிப்படையில் அணிகின்றார்கள். சிலர் ட்ரெண்டாக அணியும் வழக்கமும் காணப்படுகின்றது.

ருத்ராட்சம் அணிபவரா நீங்க? போலியை கண்டறிய எளிய வழிகள் இதோ... | How To Identify The Fake Rudraksha

ருத்ராட்சம் அணிவதால் இதய நோய், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உட்பட பல்வேறு நோய்களுக்கும் தீர்வு கொடுக்கும் என்று தொன்று நம்பப்படுகின்றது. 

ருத்ராச்சம் அணிவதை பலரும் பின்பற்ற ஆரம்பித்தவுடன் சந்தைகளில் அதை வைத்து வியாபாரம் செய்வோரின் எண்ணிக்கையம் வெகுவாக அதிகரித்துவிட்டது.

ருத்ராச்சத்தை வெறுமனே ட்ரெண்டாக அணிபவர்கள் போலியை அணிந்துக்கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை.

ருத்ராட்சம் அணிபவரா நீங்க? போலியை கண்டறிய எளிய வழிகள் இதோ... | How To Identify The Fake Rudraksha

ஆனால் ருத்ராட்சத்தின் சாதக பலன்களை பெற வேண்டும் எனும் நோக்கிலும் மத நம்பிக்கையின் பேரிலும் அதனை அணிபவர்கள் உண்மையான ருத்ராட்சத்தை சரியாக தெரிவு செய்ய வேண்டியது அவசியம். 

அப்போது தான் ருத்ராட்சம் அணிவதன் முழு பலன்களையும் பெற முடியும்.  உண்மையான ருத்ராட்சத்தை கண்டறிய ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து அதில் ருத்ராட்சத்தை போட வேண்டும். 

தண்ணீரில் மூழ்கினால் அது உண்மையான ருத்ராட்சம். தண்ணீரில் மிதந்தால் அது போலி ருத்ராட்சம். என்பதை எளிமையாக கண்டறியலாம்.

ருத்ராட்சம் அணிபவரா நீங்க? போலியை கண்டறிய எளிய வழிகள் இதோ... | How To Identify The Fake Rudraksha

அப்படியும் நம்பிக்கை வரவில்லை என்றால் ருத்ராட்சத்தை சிறிது நேரம் கடுகு எண்ணெயில் போட்டு வைக்க வேண்டும்.உண்மையான ருட்ராட்சம் அதன் நிறத்தை இழக்காது. அதே நேரத்தில், போலி ருத்ராட்சத்தை சிறிது நேரதிலேயேநிறத்தை இழந்துவிடும். 

இந்த முறைகளை பின்பற்றுவதன் மூலம் உண்மையான ருத்ராட்சத்தை எளிமையாக கண்டறிந்து விடலாம்.