இந்த 2025 ம் ஆண்டில் கிரகப் பெயர்ச்சி முக்கியதானதாக கருதப்படுகின்றது. ஜோதிட சாஸ்திரத்தின் படி இந்த 4 கிரகப்பெயர்ச்சிகள் இடம்பெறும் என கூறப்படுகின்றது.

இது அனைத்து ராசிகளையும் தாக்கும். இந்த காரணத்தினால் சில அசுப பலன்களும் சுப பலன்களும் கிடைக்கும். ஒவ்வொரு கிரகங்கள் பெயர்ச்சி அடையும் போதும் ஒவ்வொரு தாற்றம் கிடைக்கும்.

இதனை கருத்தில் கொண்டு எப்போது கிரக பெயர்ச்சி இடம்பெறுகின்றது என்றும் அதனால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இம்மாதம் முதல் நடைபெறும் சனி, குரு, ராகு, கேது பெயர்ச்சி: எந்த ராசியை பாதிக்கும்? | Top4 Planetary Transit In 2025 Which Zodiac Affect

மே 15 குரு பெயர்ச்சி

இந்த புத்தாண்டில்  குரு கிரகம் ரிஷப ராசியில் இருக்கும். இது  மே 15 திகதி இந்த கிரகம் ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு செல்லும்.

 குரு  வருடத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றுகிறார். இதன்படி குருபகவான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மிதுன ராசிக்குள் செல்கிறார்.

இந்த குரு பெயர்ச்சி ஜோதிடப்படி அனைத்து ராசிகளுக்கும் கெட்ட பலன்களை அள்ளி கொடுக்கப்போகிறது.

மே 18 ராகு-கேது பெயர்ச்சி

ஜோதிட சாஸ்திரத்தில் ராகு-கேது பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் பாவ கிரகங்கங்களாக இருக்கின்றது. இந்த இரண்டு கிரகங்களும் மே 18 அன்று ஒரே நேரத்தில் தங்களின் இடத்தை மாற்றிக்கொள்ளும்.

இதன்போது ராகு மீனத்திலிருந்து கும்ப ராசிக்கும், கேது கன்னியிலிருந்து சிம்ம ராசிக்கும் நுழையும். ராகு மற்றும் கேது ஒரு ராசியில்  18 மாதங்கள் பயணம் செய்வார்கள்.

இதன்படி பார்த்தால் ராகு கும்ப ராசியிலும், கேது கன்னி ராசியிலும் 18 ஆண்டுகளுக்குப் பிறகு நுழைகின்றனர். இந்த பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை வெளிப்படுத்தும்.

மார்ச் 29 சனி பெயர்ச்சி

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சனி கிரகம் கும்ப ராசியில் இருக்கும். மார்ச் 29 அன்று இந்த கிரகம் கும்பத்திலிருந்து மீன ராசிக்கு செல்லும்.

இவர் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் தங்கியிருப்பார். இதன்படி சனி 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசிக்கு செல்கிறார்.

இந்த சனிப்பெயர்ச்சியால்  மேஷம், மீனம் மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனியும், சிம்மம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு அஷ்டமச் சனியும் இருக்கும்.