பைரவரை வழிபடுவதற்கு மிகவும் ஏற்ற நாள் தேய்பிறை அஷ்டமி ஆகும். இந்த நாளில் பைரவாஷ்டகம் சொல்லி, பைரவரை மனதார வழிபட்டால் அனைத்துதீர்க்க முடியாத பிரச்சனைகள் கூட காலபைரவரை வழிபட்டால் விலகி விடும். செல்வ வளம் அதிகரிக்கும். எந்த பிரச்சனை தீர, காலபைரவரை எப்படி வழிபட வேண்டும் என்பதை தெரிந்த கொள்ளலாம்.

காலாஷ்டமி என பக்தர்களால் போற்றப்படும் நாள் தெய்வீக ஆற்றல் நிறைந்த ஒரு நாளாகும். இது காலத்தின் கடவுளாக போற்றப்படும் கால பைரவருக்குரிய மிக முக்கியமான வழிபாட்டு நாளாகும். ஒவ்வொரு மாதமும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமிகள் இரண்டுமே பைரவருக்கு உரிய வழிபாட்டு நாள் என்றாலும், தேய்பிறை அஷ்டமி திதியில் மிக விசேஷமான நாளாக கருதப்படுகிறது.

இன்று மாசி மாத தேய்பிறை அஷ்டமி : கால பைரவரை இப்படி வழிபடுங்க...துன்பங்கள் நீங்கும் | Today Is The Eighth Day Of The Lunar Monthஇந்த நாளில் கால பைரவரை விரதம் இருந்து வழிபடுவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளார்கள். கால பைரவர், தனது பக்தர்களை அனைத்து தீமைகளிலிருந்தும் காக்கும் மகா சக்திவாய்ந்த தெய்வமாக போற்றப்படுகிறார். இதனால் தங்களின் துன்பங்கள் நீங்க தேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை பக்தர்கள் வழிபடுகிறார்கள்.  

தேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை வழிபடுவதால் எதிரிகள் தொல்லை நீங்கும், கடன் பிரச்சனைகள், வழக்கு உள்ளிட்ட மீள முடியாத சிக்கல்கள் நீங்குவதுடன் செல்வ செழிப்பு, மகிழ்ச்சி, நிம்மதி ஆகியவையும் கிடைக்க அருள் செய்கிறார்கள்.

பயம், குழப்பம், எதிர்மறை ஆற்றல்களின் தாக்கம் ஆகியவை குறையும். பிப்ரவரி மாத தேய்பிறை அஷ்டமி பிப்ரவரி 20ம் தேதியான நாளை அமைகிறது. இது மாசி மாத தேய்பிறை அஷ்டமி என்பதால் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் என்னென்ன பரிகாரங்கள் செய்து, காலபைரவரை வழிபட்டால், என்ன நன்மைகளை பெறலாம் என்பதை வாங்க தெரிந்து கொள்ளலாம்.

செல்வ செழிப்பு அதிகரிக்க, மண் விளக்கில் கடுகு எண்ணெய் ஊற்றி, கால பைரவர் சன்னதிக்கு முன் தீபம் ஏற்றவும். தீபம் ஏற்றும் போது, "ஓம் ஹ்ரீம் பதுகாய அபதுத்தாரணாய குரு குரு பதுகாய ஹ்ரீம் ஓம்" என்ற மந்திரத்தை இரண்டு முறை ஜெபிக்க வேண்டும். பிறகு உங்களின் வேண்டுதலை மனதார காலபைரவரிடம் சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள். வருமானத்தில் பிரச்சனை, கடன் தொல்லை இருந்தாலும், செல்வ நிலை உயர வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இன்று மாசி மாத தேய்பிறை அஷ்டமி : கால பைரவரை இப்படி வழிபடுங்க...துன்பங்கள் நீங்கும் | Today Is The Eighth Day Of The Lunar Month

வாழ்க்கையில் சிக்கல்கள் அதிகமாக உள்ளது என்றால் காலாஷ்டமியில், ஒரு கருப்பு நாய்க்கு கடுகு எண்ணெய் தடவிய ரொட்டியை சாப்பிட கொடுக்கலாம். இதை செய்யும் போது, "ஓம் ஹ்ரீம் பதுகாய அபதுத்தாரணாய குரு குரு பதுகாய ஹ்ரீம் ஓம்" என்ற மந்திரத்தை ஐந்து முறை சொல்லுங்கள். இந்த பரிகாரம், உங்கள் துன்பங்களை நீக்கி , மனநிறைவு மற்றும் அமைதியை வழங்கும்.

அடிக்கடி பயம், பதற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றால் கால பைரவரின் திருவடியில் ஒரு கருப்பு நூலை ஐந்து நிமிடங்கள் வைக்க வேண்டும். இந்த நேரத்தில், "ஓம் ஹ்ரீம் பதுகாய அபதுத்தாரணாய குரு குரு பதுகாய ஹ்ரீம் ஓம்" என்ற மந்திரத்தை சொல்லுங்கள். பின்னர், அந்த நூலை உங்கள் வலது கணுக்காலில் கட்டிக் கொள்ளுங்கள். இதனால் கால பைரவரின் தெய்வீக சக்தி உங்களை பாதுகாப்பு அளிக்கும்.

இன்று மாசி மாத தேய்பிறை அஷ்டமி : கால பைரவரை இப்படி வழிபடுங்க...துன்பங்கள் நீங்கும் | Today Is The Eighth Day Of The Lunar Month

உங்கள் வீட்டில் குழப்பம், எதிர்மறை ஆற்றல் உள்ளது என்றால், வன்னி மரம் அருகே சென்று நீர் ஊற்றி, ஒரு நூலும் செலுத்தி, "ஓம் ஹ்ரீம் பதுகாய அபதுத்தாரணாய குரு குரு பதுகாய ஹ்ரீம் ஓம்" என்ற மந்திரம் ஜெபிக்கவும். இது முடியாதவர்கள், வீட்டின் வாசலில் ஏழு முடிச்சுகளுடன் இருக்கும் ஒரு நூலை கட்டுங்கள், ஒவ்வொரு முடிச்சுக்கும் மந்திரம் சொல்லுங்கள். இதனால் வீட்டில் அமைதியும், நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கும்.