பொதுவாகவே மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிறப்பு குணங்கள் மற்றும் எதிர்மறை குணங்கள் இருக்கும்.
அவர்களின் பண்புகள், எதிர்கால வாழ்க்கை ஆகியவற்றுக்கும் அவர்களுடைய பிறப்பு ராசிக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் தங்களின் நம்பிக்கையை உடைப்பவர்களை வாழ்நாள் ழுழுவதும் மறக்கவும் மன்னிக்கவும் மாட்டார்களாம்.
அப்படி சாகும் வரைவில் துரோகத்தை நினைவில் கொள்ளும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் பிறந்தவர்கள் இயல்பாகவும் வாழ்வில் எல்லா சந்தர்ப்பங்களிலும் உண்மைக்கும் நேர்மைக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் நேர்மையாக வாழவேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருப்பார்கள். மற்றவர்களும் இவர்களிடத்தில் உண்மையாக இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருக்கும்.
இவர்களுக்கு துரோகம் நடந்துவிட்டால், அதனை கடந்து செல்வது இவர்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும். இவர்கள் வாழ்க்கை முழுவதும் துரோக்கிகள் மீது வெறுப்பை மட்டுமே காட்டுவார்கள்.
ஆனால் ஒருபோதும் இவர்கள் துரோகிகளாக மாறமாட்டார்கள். எத்தனை முறை ஏமாற்றப்பட்டாலும் இவர்களின் உண்மை குணத்தை மாற்றிக்கொள்ள மாட்டார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் வாழ்வில் உயர் பதவியில் இருக்க வேண்டும் எனவும், மற்றவர்களை அடக்கியாள வேண்டும் என்றும் எதிர்ப்பார்ப்பார்கள்.
ஆனால் விசுவாசிகளாகவும் நேர்மைக்கு பெயர் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.அவர்கள் துரோக்கிகளை வாழ்க்கை முழுக்க மறக்கவும் மன்னிக்கவும் மாட்டார்கள்.
துரோக்கிகள் மீது இவர்கள் காட்டும் வெறுப்பு அவர்கள் செய்த துரோகத்தை விட பல மடங்கு வலியை கொடுக்கும்.
இவர்களின் நம்பிக்கை ஒரு முறை உடைத்துவிட்டால் வாழ்வில் மறுபடியும் இவர்களை நெருங்கவே முடியாது.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள் தங்களின் இலக்குகள் மீது தீவிர கவனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் விசுவாசத்தையும், நம்பிக்கையையும் வாழ்வில் முக்கிய விடமாக கருதுவார்கள். இவர்களுக்கு துரோகியா மாறுவது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
இவர்களின் கோபம் மற்றும் வெறுப்பை யாராலும் தாங்கிக்கொள்ளவே முடியாது. இவர்களின் வலுவான பொறுப்பு மற்றும் கடமை உணர்வு தான் இவர்கள் துரோகிகளை மன்னிக்கவும், மறக்கவும் விடுவதில்லை.