நம்முடைய வாழ்க்கையில் வருகின்ற ஒவ்வொரு நாளும் சிறப்பானது என்றாலும் குறிப்பிட்ட சில நாட்களில் நாம் செய்யும் பிராச்சனை மற்றும் வழிபாடுகள் நம்முடையை வாழ்க்கையே மாற்றி அமைத்து விடுகிறது.

அந்த வகையில், தெய்வங்களுக்கு உகந்த நாளில் விரதம் இருந்து மனம் நிறைவாக வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு கைமாறாக பிரச்சினைகள் அனைத்தும் தெய்வங்களால் தீர்த்து வைக்கப்படுகிறது என ஜோதிடம் கூறுகிறது.

அப்படியொரு சிறப்புமிக்க நாள் தான் வருகிற நவம்பர் 03ம் தேதி. அந்த நாளை ஒவ்வொரு மனிதரும் தவற விடாமல் அன்றைய நாளின் முழு பலனையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

நவம்பர் 03ம் தேதி அப்படி என்ன நடக்கப்போகிறது என தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருப்பார்கள். அன்றைய நாளானது சிவ பெருமானுக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது.நவம்பர் 3ம் தேதியை யாரும் மறக்காதீங்க.. ஆபத்தை தடுத்து நிறுத்தும் அந்தவொரு நாள்! | Somwar Pradosh 2025 Worship Significance Benefits

சோமவார பிரதோஷம் நடக்கும் அந்நாளில் ஐப்பசி மாத சோமவார பிரதோஷம் என்றும் அழைக்கிறார்கள். ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகத்திற்கு முன் வரும் சோமவார பிரதோஷம் என்பதால் பக்தர்களுக்கு சிறப்பான நாளாக அமையும்.

எதிர்வரும் நவம்பர் 3ம் தேதி பிரதோஷம் நடக்கும் சமயத்தில் ரேவதி நட்சத்திரம் தென்படும். இந்த ரேவதி நட்சத்திரம் வருகையால் பக்தர்கள் இவ்வளவு நாட்களாக செய்து வந்த பாவங்கள், துன்பங்கள் அனைத்தையும் இல்லாமல் செய்து கோடீஸ்வர யோகம் தரும்.

அப்படியாயின், நவம்பர் 3ம் தேதி வேறு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.   

 நவம்பர் 3ம் தேதியை யாரும் மறக்காதீங்க.. ஆபத்தை தடுத்து நிறுத்தும் அந்தவொரு நாள்! | Somwar Pradosh 2025 Worship Significance Benefits

அன்றைய நாளில் சிவ பெருமானுக்கு உரிய வழிபாடுகள் செய்து வந்தால் உங்களுடைய கஷ்டங்கள் இல்லாமல் போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பிரதோஷ வழிபாடுகளில் சனி பிரதோஷத்திற்கு அடுத்தபடியாக பக்தர்களால் நம்பப்படுவது சோமவார பிரதோஷமாகும்.

இந்த நாளானது சோமன் என்பது சந்திரனை குறிப்பதாக புராண கதைகளும் உள்ளன. அதாவது சிவ பெருமானின் தலையில் சூடியிருக்கும் சந்திரன் உரிய நாளான திங்கட் கிழமை வருவதால் சோமவார பிரதோஷம் என அழைக்கப்படுகிறது.

நவம்பர் 3ம் தேதியை யாரும் மறக்காதீங்க.. ஆபத்தை தடுத்து நிறுத்தும் அந்தவொரு நாள்! | Somwar Pradosh 2025 Worship Significance Benefits

ஜோதிடத்தின்படி, சந்திர பகவான் மனோகாரகன் என்றும் அழைக்கப்படுகிறார். ஏனெனின், ஒருவரின் மனதில் உள்ள குழப்பங்கள், வேதனைகள், நிம்மதியின்மை மற்றும் அழுத்தங்கள் இவற்றிற்கு சந்திரன் தான் காரணமாக பார்க்கப்படுகிறார். வழக்கமாக குடும்பத்தில் வரும் பிரச்சினைகள் கூட இவரால் தான் வருகிறது. அதிலிருந்து விடுபெற்று மகிழ்ச்சியான வாழ்க்கை விரும்புபவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து குடும்ப வழிபாடுகள் செய்யலாம். 

நவம்பர் 3ம் தேதி வரும் சோமவார பிரதோஷம் மாலை 04.30 முதல் 6 மணி வரையிலான நேரம் இருக்கும். சிவ பெருமானின் சுவாசமாக கருதப்படும் நந்தி பகவானுக்கு அபிஷேகம் செய்வதற்கான பொருட்களை வாங்கி, அருகம்புல் சாற்றி வழிபட வேண்டும்.

நவம்பர் 3ம் தேதியை யாரும் மறக்காதீங்க.. ஆபத்தை தடுத்து நிறுத்தும் அந்தவொரு நாள்! | Somwar Pradosh 2025 Worship Significance Benefits

விரதம் இருந்து வழிபாடு செய்யும் சமயத்தில் மெளன விரதம் இருப்பது நல்லது. அப்போது தான் பக்தர்கள் மனதார வழிபட முடியும். இரு கண்களையும் மூடி, ஓம் நம சிவாய மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். பிரதோஷம் நடக்கும் வேளையில், நமது வேண்டுதல்களை கூறி வழிபட்டால் துன்பங்கள் அனைத்திலும் இருந்து விடுபட முடியும். சோமவார பிரதோஷம் நாளில் சிவ பெருமானின் மனதை மகிழ வைப்பது சிறந்தது.