ஜோதிடத்தின் படி, ஞானத்தை அள்ளித் தரும் கிரகமாக பார்க்கபடுபவர் புதன் தான். புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார் மற்றும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.

இவர் மீன ராசியில் தற்போது பயணம் செய்து வருகிறார். இந்நிலையில் புதன் மே மாதம் 07 ஆம் தேதி மேஷ ராசிக்கு செல்லவுள்ளார்.

புதன், மேஷ ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும். அந்த வகையில் எந்த ராசியினருக்கு நல்ல பலன் கிடைக்கப்போகின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மே7 புதன் பெயர்ச்சி: செல்வத்தில் உச்சம் அடையப்போகும் ராசிகள் உங்க ராசி என்ன? | Zodiac Signs Budhan Transit Rasi Palan 2025

மேஷம்
  • மேஷ ராசிக்கு புதன் பகவானின் சிறப்பு ஆசிர்வாதம் சிறப்பாக கிடைக்கும்.
  • வேலை தேடிக்கொண்டிருந்தால் நல்ல வேலை கிடைக்கும்.
  • நினைத்த சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். 
  • தன்னம்கிக்கையுடன் செயல்படுவீர்கள். 
  • வியாபாரத்தில் திட்டமிட்டபடி செயல்பட்டால், நல்ல லாபம் கிடைக்கும்.
  • உங்களுக்கு தொழிலில் எல்லா நன்மைகளும் வந்து சேரும்.
கடகம்
  • கடக ராசியினருக்கு புதன் மாற்றம் நேர்மறையான தாக்கத்தை புதன் தருவார்.
  • தொழில் வியாபாம் எதுவாக இருந்தாலும் வெற்றி தான்.
  • நிறைவேறாத காரியம் நிறைவேறும். 
  • நிதியில் நல்ல நிலையை அடைவீர்கள்.
  • புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
  • கடன் பிரச்சனை முற்றாக நீங்கும்.

 

 

சிம்மம்
  • சிம்மம் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டிற்குள் புதன் பகவான் செல்கிறார்.
  • எது எடுத்துக்கொண்டாலும் உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.
  • புதிய நிலைச்சொத்திற்கு சொந்தமாகுவீர்கள். 
  • பணவரவு உங்களுக்கு அதிகரிக்கும்.
  • யோதிடத்தில் கோடீஸ்வர யோகம் கிடைக்கும் என சொல்லப்படுகின்றது.
துலாம்
  • துலாம் ராசிக்காரர்களுக்கு நேர்மறையான செல்வாக்கு இருக்கும்.
  • தொழிலில் உங்கள் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
  • பைழைய நண்பர்களை சந்திக்கலாம்.
  • வேலையில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்றவையும் ஏற்படலாம்.
  • மன அழுத்தம் குறைந்து ஆரோக்கியம் மேம்படும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.