ஒரு நாளைக்கு சராசரியாக 50 முதல் 100 முடிகள் உதிர்வது இயல்பான விடயமாக பார்க்கப்படுகிறது. மாறாக உங்களுடைய தலையில் 100,000 முடிகள் இருக்கும் வரையில் தலைமுடி உதிர்வு பெரிய பிரச்சினையாக வராது.

இந்த அளவை விட எண்ணிக்கைக்கு குறைவாக இருக்கும் போதே தலைமுடி உதிர்வு அதிகமாக இருக்கிறது என்ற உணர்வு வர ஆரம்பிக்கும்.

தலைமுடி உதிர்வை சிலருக்கு நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் நிறுவதற்கு பல முயற்சிகள் செய்வார்கள். ஆனால் அவை அனைத்தும் பலன் என்பது கேள்விகுறியாகவே உள்ளது.

ஊட்டசத்து குறைப்பாடு, ஹார்மோன்கள் மாற்றம், தைராய்டு பிரச்சனை மற்றும் மாதவிடாய் பிரச்சனைகள் உள்ளிட்ட காரணங்களால் கூட தலைமுடி உதிர்வு இருக்கலாம். இது போன்ற பல காரணங்கள் இருந்தாலும் தலைமுடி உதிர்வை கட்டுபடுவதற்கு இயற்கையான வழிமுறைகளே நிரந்தரமான தீர்வைக் கொடுக்கிறது.

அந்த வகையில், தலைமுடி உதிர்வு அதிகமாக இருப்பவர்கள் வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு  ஷாம்பூ செய்து தலைக்கு பயன்படுத்தலாம். இது விரைவில் தீர்வுக் கொடுக்காவிட்டாலும், காலப்போக்கில் தலைமுடி உதிர்வு நின்று அதன் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

தலைமுடி வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் ஷாம்பூ - எப்படி செய்றாங்க தெரியுமா? | Hair Growth Homemade Shampoo Preparation In Tamil

அப்படியாயின், தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் ஷாம்பூ எப்படி தயாரிக்கலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம். 

1. ஒன்று அல்லது இரண்டு முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக எடுத்து, அதனுடன் சிறிது எழுமிச்சைபழ சாறை சேர்த்து நன்கு கலந்து விடவும். அதனை தலைமுடியின் வேர் பகுதியில் படும் வரை தேய்க்க வேண்டும். பின்னர் சிறிது நேரம் அப்படியே விட்டு விட்டு குளிர்ந்த நீரில் சீயக்காய் போட்டு தலைமுடி அலச வேண்டும்.

2. தேவையான அளவு தயிரை எடுத்து, அதனுடன் சிறிது எழுமிச்சைபழ சாறை சேர்த்து கலந்து கொள்ளவும். அதன் பின்னர் தலைமுடியில் நன்றாக கலவை தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். காய்ந்த பின்னர் சீயக்காய் போட்டு தலைமுடியை நன்றாக கழுவ வேண்டும்.

தலைமுடி வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் ஷாம்பூ - எப்படி செய்றாங்க தெரியுமா? | Hair Growth Homemade Shampoo Preparation In Tamil

3. வழக்கமாக தேங்காய் எண்ணெய் எடுத்து, அதனுடன் தேங்காய் பால் கொஞ்சமாக சேர்த்து கெட்டியாகும் வரை கலந்து விட்டு, தலைமுடிக்கு தடவலாம். சிறிது நேரம் நன்கு மசாஜ் செய்து விட்டு, சீயக்காய் போட்டு குளிக்கலாம் இப்படி செய்தால் தலைமுடி உதிர்வு கட்டுக்குள் இருக்கும்.       

தேவையான பொருட்கள்:

  • ஆர்கன் ஆயில் – 2 ஸ்பூன்
  • அலோவேரா ஜெல் – 3 ஸ்பூன் கஸ்டர்
  • ஆயில் (சிறு வாணலி எண்ணெய்) – 1 ஸ்பூன்
  • செம்பருத்தி பூ பேஸ்ட் (Hibiscus flower paste) – 2 ஸ்பூன்
  • குளிர்ந்த கிரீன் டீ நீர் – 1/4 கப்
  • சர்க்கரை இல்லாத இயற்கை ஷாம்பூ பேஸ் (அதாவது Organic Liquid Castile Soap) – 1/2 கப்
  • தேவையான அளவு நறுமணத் தைலம் (Lavender or Rosemary Essential Oil)– சில துளிகள் 

தலைமுடி வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் ஷாம்பூ - எப்படி செய்றாங்க தெரியுமா? | Hair Growth Homemade Shampoo Preparation In Tamil

முதலில் ஒரு பெரிய கிண்ணத்தில் Organic Liquid Soap-ஐ ஊற்றி, அதனுடன் அலோவேரா ஜெல் மற்றும் கஸ்டர் ஆயில் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

அதன் பின்னர், செம்பருத்தி பூ பேஸ்ட் மற்றும் ஆர்கன் ஆயில் இரண்டையும் ஒன்றன் பின் ஒன்றாக கலந்து விடவும். அதனுடன் சிறிது குளிர்ந்த கிரீன் டீ நீர் ஊற்றி கலந்து கொண்டே இருக்கவும்.

கடைசியாக விருப்பம் இருந்தால் நறுமணத்திற்காக Essential Oil சேர்க்கலாம். இதனை நன்கு கலக்கி, ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி சேமித்து தலைக்கு தடவலாம்.  

தலைமுடி வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் ஷாம்பூ - எப்படி செய்றாங்க தெரியுமா? | Hair Growth Homemade Shampoo Preparation In Tamil

தலைமுடி ஈரமாக இருக்கும்போது, சிறிது அளவு ஷாம்பூ எடுத்து மெதுவாக தலையில் தடவி மசாஜ் செய்யலாம். 5 நிமிடம் வரை ஊற வைத்து விட்டு வெது வெதுப்பான நீரில் கழுவலாம்.

இதனை வாரத்திற்கு 2 முதல் 3 முறை பயன்படுத்தினால் சிறந்த தீர்வு கிடைக்கும்.

 விளைவுகள்:

✔️ தலைமுடி வேகமாக வளர்ச்சியடையும்.

✔️ ஸ்கால்ப் ஆரோக்கியமாக மாறும்.

✔️ நீண்ட நாட்களாக இருந்த தலைமுடி பிரச்சினை முடிவுக்கு வரும். செம்பருத்தி பூ பேஸ்ட் இருப்பதால் தலைமுடி உதிர்வு குறையும்.

✔️ தலைமுடி முன்னர் இருந்தது போன்று அல்லாமல் மென்மையாகவும் பிரகாசமாகவும் மாறும். 

முக்கிய குறிப்பு

ஒவ்வாமை எதும் ஏற்பட்டால் உரிய மருத்துவரின் ஆலோசனையை நாடுவது சிறந்தது.