யோதிடத்தின்படி கிரகப்பெயர்ச்சிகள் பெருதும் சக்திவாய்ந்தவையாக இருக்கிறது. நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றுவது மட்டுமின்றி, யோகங்களையும் உருவாக்கி, மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதில் தற்போது நவக்கிரகங்களின் ராஜா கிரகமான சூரியன் சக்தி வாய்ந்த ராஜயோகத்தை உருவாககியுள்ளார்.

அதாவது ஜூன் மாதத்தில் சூரியனும், குருவும் மிதுன ராசியில் ஒன்றிணைந்து குரு ஆதித்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர். இதன் மூலம் அதிஷ்டம் பெறும் ராசிகள் யாவர் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

12 ஆண்டுகள் கழித்து உருவாகும் அபூர்வ யோகம்: திடீர் அதிஷ்டம் பெறும் ராசிகள் எவை? | Guru Aditya Rajyog In Gemini Zodiac Signs Lucky

கன்னி
  • கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் குருவின் சேர்க்கையால் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.
  • உங்களுக்கு  வேலை மற்றும் வணிகத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.
  • இனி வரும் வாழ்க்கையின் ஆடம்பரங்களும், வசதிகளும் அதிகரிக்கும்.
  • பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
  • புதிய வீடு, வாகனம் அல்லது ஏதாவது  சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
  • நிதி நிலையில் உயர்ந்து செல்வீர்கள்.
சிம்மம்
  • சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் குரு சேர்க்கையால் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.
  • உங்களுக்கு வருமானத்தில் உயர்வு கிடைக்கும்.
  • புதிய வீடு, வாகனம் வாங்குவீர்கள்.
  • முதலில் செய்த முதலீடுகளில் நினைத்த லாபம் கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும்.
  • புதிய வேலையை தொடங்க நினைத்தால், இக்காலம் சாதகமாக இருக்கும்.
  • கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.
மீனம்
  • மீன ராசியின் 4 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.
  • இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஆடம்பரங்களும், வசதிகளும் அதிகரிக்கும்
  • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • பணத்திற்கான அனைத்து திட்டங்களும் வெற்றி கிடைக்கும்.
  • செல்வம் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
  • வியாபாரிகளுக்கு திடீர் லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
  • நிதியில் முன்னேறுவீர்கள்.