பெண்கள் புதிதாக தாலியை மாற்றும் போது பழைய தாலி கயிறை என்ன செய்ய வேண்டும்? எந்த நேரம் மாற்ற மாற்ற வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

உலகப்பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழா, மதுரையில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பித்த நிலையில், ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மன் கோவிலில் விழாக்கள் நடைபெற்ற வருகின்றது.

இந்த விழாவில் முக்கியமான ஒன்றாக மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெறுகின்றது.

இதில் மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்படும். அந்நேரத்தில் இந்த திருக்கல்யாணத்தை காண வந்திருந்த ஏராளமான பெண்கள் தாங்களும் தாலி சரடுகளை மாற்றிக் கொள்வார்கள்.

இந்த வைபவத்தைக் கண்டால் திருமணம் விரைவில் கைகூடும் என்றும் தாலி சரடுகளை மாற்றிக் கொண்டால் மீனாட்சி அம்மன் தீர்க்க சுமங்கலி வரத்தை அருள்வாள் என்ற நம்பிக்கை நிலவி வருகின்றது.

பெண்கள் பழைய தாலி கயிறு மாற்ற சரியான நேரம் எது? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க | Best Time For Women To Change Their Thaali

அந்தவகையில், மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நாளை அதாவது மே 8ம் தேதி காலை 8 - 9 மணி வரையில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.

குறிப்பாக உத்திராடம் நட்சத்திரம் மே 7ம் தேதி மாலை 6.17 மணிக்கு தொடங்கி மே 8ஆம் தேதி இரவு 9.06 மணிக்கு முடிகிறது.

காலை 8 - 9 மணி வரையில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும் என்பதால், அந்த நேரத்தில் பெண்கள் தாலி மாற்றி கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. 

பெண்கள் பழைய தாலி கயிறு மாற்ற சரியான நேரம் எது? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க | Best Time For Women To Change Their Thaali

பொதுவாக தாலி கயிறை மாற்றுவதற்கு சரியான கிழமை பார்ப்பது அவசியமாகும். சந்திர தரிசனம், சுபமுகூர்த்த நாள், மேல் நோக்கு நாள், சித்த யோகம், அமிர்த்த யோகம் என்றுஎல்லாமே கூடி வரக்கூடிய அம்சமான நாளாக இருக்க வேண்டும்.

முக்கியமாக தாலிக்கயிறு மங்குவது போல இருந்தால் மட்டுமே மாற்றவேண்டும். தாலிக்கயிற்றை புதிதாக மாற்ற திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் மட்டும் தான் மாற்ற வேண்டும்.

பெண்கள் பழைய தாலி கயிறு மாற்ற சரியான நேரம் எது? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க | Best Time For Women To Change Their Thaali

அப்படி மாற்றும்போது, பழைய கயிற்றை செடி, கொடிகளில் கட்டிவிடலாம். இல்லாவிட்டால் அருகிலுள்ள கோவிலில் உள்ள மரங்களில் கட்டிவிடலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் குப்பையில் தூக்கி போடக்கூடாது.