எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன. இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.

ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.

அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.

எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது என கூறப்படுகிறது. அப்படியானவர்கள் எந்தெந்த திகதிகளில் பிறந்திருக்கிறார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.  

Numerology: சிரிக்கச் சிரிக்க ஆபத்து வரலாம்.. இந்த தேதி பிறந்தவரிடம் எச்சரிக்கையாக இருங்க! | These Dates Born People Dangerous Numerology

எண் 7 எண் கணிதம் என்பது ஒரு பழங்கால நம்பிக்கையாக உள்ளது. எண் 7 பிறந்தவர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனின் அவர்களின் குணாதிசயங்களையும் போக்குகளையும் தெளிவாக புரிந்து கொள்ள முடியாது. கர்வமாகவும், சுயநலம் குணம் கொண்டவர்களாக திகழ்வதால் இவர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது அவசியம்.
எண் 8  8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் லட்சியத்தை அடைவதற்காக விடாமுயற்சியுடன் நடந்து கொள்வார்கள். இந்த குணத்தால் வெற்றி பெறுவார்கள். ஆனால் சில சமயங்களில் லட்சியத்தை அடைய அவர்கள் கர்வமாக திகழ்வார்கள். மற்றவர்களை விட தனித்துவமாக தெரிய வேண்டும் என்ற போட்டி எண்ணத்துடன் நடந்து கொள்வார்கள். வெறுப்பு மற்றும் மனக்கசப்புடன் நடந்து கொள்வதால் மற்றவர்களுடன் நல்ல உறவு கிடைக்காது. 
எண் 1 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் வலுவான தலைமைத்துவ குணங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள். நல்ல கட்டுப்பாடு திறன் கொண்டிருப்பார்கள். இந்த குணங்கள் நல்லவையாக இருந்தாலும் அவை சில நேரங்களில் அகங்கார போக்குடன் வெளிப்படும். மற்றவர்களின் தேவைக்கருதி செயற்படும் நபராக இருப்பார்கள்.