கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கும் முந்திரி பழத்தினை சாப்பிட்டால் ரத்த சோகை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணலாம்.

இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை கலந்த முந்திரி பழமானது கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழமாகும். மென்மையான தோற்றம் கொண்ட இந்த பழத்தில் ஏகப்பட்ட ஊட்டசத்துக்கள் இருக்கின்றது.

வைட்டமின் சி, இரும்புச் சத்து, பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை அதிகமாக காணப்படுகின்றது.

ரத்த சோகையால் அவதிப்படுறீங்களா? தினமும் ஒரு முந்திரி பழம் சாப்பிடுங்க | Cashew Apple Eating Increase Hemoglobin

இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் செல் அழிவைத் தடுப்பதுடன், இதிலுள்ள நார்ச்சத்து செரிமானத்தை அதிகரிக்கவும் உதவுகின்றது. அதிக நீர்ச்சத்து கொண்ட இந்த பழம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் உதவியாகவும் இருக்கின்றது.

அடிக்கடி இதனை எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படுகின்றது. மேலும் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கின்றது.

உடம்பில் ரத்தம் குறைவாக இருப்பவர்கள், ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டவர்கள் முந்திரி பழத்தினை சாப்பிடுவதால், ரத்த சோகையிலிருந்து விடுபட முடியும்.

ரத்த சோகையால் அவதிப்படுறீங்களா? தினமும் ஒரு முந்திரி பழம் சாப்பிடுங்க | Cashew Apple Eating Increase Hemoglobin

மேலும் உடலின் வெப்பத்தை தணிப்பதுடன், இதிலுள்ள பொட்டாசியம், ரத்த அழுத்தத்தினை சீராக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

குறிப்பாக கோடையில் உடலுக்கு தேவைப்படும் ஈரப்பதத்தையும், குளிர்ச்சியையும் வழங்குவதால், இதனை அடிக்கடி எடுத்துக் கொள்ளவும்.