ஜோதிட சாஸ்திரத்தின்படி, பல நூற்றாண்டுகளாக ஒருவர் பிறந்த ராசி, நேரம், கிழமை ஆகியவற்றை கொண்டு அவர்களின் எதிர்காலத்தை கணிக்க முடியும்.
அதேசமயம் ஒருவர் திருமணத்தில் எப்படிப்பட்டவராக இருப்பார்கள் என்பதையும் கண்டுபிடித்து விடலாம். ஒருவரின் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் போன்று அவர்களின் பிறந்த மாதமும் முக்கியப்பங்கு வகிக்கிறது.
சிறந்த மனைவி என்பதற்கான பொருள் நபருக்கு நபர் மாறுபடும். மாறாக சிலரின் மனைவிகளுக்கு அனைத்து நல்ல குணங்களும் இயற்கையாகவே நிறைந்திருக்கும்.
அதிலும் குறிப்பாக, குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்த பெண்கள் கடவுள் கொடுத்த வரம் போன்று நடந்து கொள்வார்களாம்.
அந்த வகையில், எந்த மாதத்தில் பிறந்த பெண்கள், சிறந்த மனைவிகளாக இருப்பார்கள் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
பிப்ரவரி |
காதலைக் கொண்டாடும் பிப்ரவரி மாதத்தில் பிறந்த பெண்கள் சிறந்த மனைவிகளாக இருப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் கணவர்களுக்கு விசுவாசம், அர்ப்பணிப்பு மற்றும் யதார்த்த நடைமுறைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் தன்னுடைய துணையிடம் அதிகமான அன்பு கொண்டிருப்பார்கள். இயல்பாகவே நிதிரீதியான ஆதரவை வழங்கும் குணம் கொண்டவர்களாக இருப்பதால் சண்டைகள் வருவது குறைவாக இருக்கும். |
ஏப்ரல் |
ஏப்ரல் மாதம் பிறந்த பெண்கள் அன்பான ஆன்மாக்களாக இருப்பார்கள். தங்கள் கணவரை அளவுக்கு அதிகமாக காதலிப்பார்கள். உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கணவரை அரவணைத்து கொள்வார்கள். குடும்ப உறவுகளை அதிகமாக மதிக்கிறார்கள். தங்கள் உறவை பாதுகாக்கும் குணம் நிம்மதியான குடும்ப வாழ்க்கையை வாழ வைக்கும். அன்பானவர்களாக இருப்பார்கள். இணக்கமான குடும்பத்தை உருவாக்க பாடுப்படுவார்கள். |
ஆகஸ்ட் |
ஆகஸ்ட் மாதம் பிறந்த பெண்கள் வாழ்க்கையில் சமநிலையையும், இணக்கத்தையும் பராமரிப்பவர்களாக இருப்பார்கள். கணவரின் வாழ்க்கையை தன்னுடைய வாழ்க்கையாக நினைத்து வாழ்வார்கள். சமநிலை, நல்லிணக்கம் மற்றும் ராஜதந்திரமான அணுகுமுறை உள்ளிட்டவை இவர்களை வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் நியாயத்திற்கு முன்னுரிமைக் கொடுத்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வார்கள். மற்றவர்களை விட சிறந்த பெண்களாக இருப்பார்கள். |