எண் கணிதம்படி, ஒருவரின் குணயியல்புகளையும், அவர்களின் நடத்தைகள் பற்றியும் முன்னரே கணித்துக் கொள்ளலாம்.

ராசிகளை போன்று எண்களை வைத்து ஒருவர் எப்படியானவர் என்பதை கூறலாம். ஏனெனின் குறிப்பிட்ட சில எண்களில் பிறந்தவர்களின் குணங்கள் ஒரே மாதிரியாக இருக்கும்.

பழங்கால சாஸ்திரமாக இருந்தாலும், இன்று சிலர் இதனை நம்புகிறார்கள். அப்படி ஒருவரின் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரத்தின் அடிப்படையில் எண்களின் குணங்கள் கணிக்கப்படுகின்றன.

எண் கணித சாஸ்த்திரன்படி, குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்கள் தங்களை ஒரு அரசர்களாகவே நினைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் எல்லா இடங்களிலும் அவர்களையே முன்னுரிமைப்படுத்திக் கொள்ள விரும்புவார்கள்.

அந்த வகையில், முடிசூடா மன்னர்களாக தங்களை நினைத்து கொண்டு வாழும் எண்களில் பிறந்தவர்கள் வேறு என்னென்ன விடயங்களில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பதை பதிவில் பார்க்கலாம். 

முடிசூடா மன்னர்களாக வாழும் நபர்கள் பிறந்த தேதி என்ன? இவங்க கிட்ட வம்பு வச்சிக்காதீங்க | These Dates Born Are Too Much Rule Life Numerology

எண் 1 12 மாதங்களில் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விடயங்களும் அவர்களின் விருப்பத்தின்படி கீழ் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். வாய்ப்புக்காக காத்திருக்காமல் வாய்ப்பு உருவாக்கும் குணம் இவர்களிடம் இருக்கும். தன்னம்பிக்கை, கவர்ச்சி மற்றும் சவாலான நேரங்களில் முடிவு எடுப்பது போன்ற வேலைகளுக்கு பெயர்ப் பெற்றவர்கள். இயற்கையாகவே தன்னை ஒரு தலைவனாக நினைத்து கொண்டு செயற்படுவார்கள். இவர்கள் எப்போதும் எந்த இடத்திலும் சிறந்த தலைவர்களாக இருப்பார்கள். 
எண் 5 12 மாதங்களில் 5, 14 மற்றும் 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் தன்னம்பிக்கை, வசீகரம் மற்றும் இயற்கையான அதிகாரம் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். அனைத்தையும் அன்பால் சாதிக்கும் குணம் இவர்களிடம் இருக்கும். தலைமைத்துவ பதவிகளில் இவர்கள் அதிகமாக இருப்பார்கள். எப்போதும் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பார்கள். இவர்களிடம் உள்ள தன்னம்பிக்கை வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல உதவியாக இருக்கும். 
எண் 8  12 மாதங்களில் 8, 17 மற்றும் 26 தேதிகளில் பிறந்தவர்கள் லட்சியவாதிகளாக இருப்பார்கள். இவர்களிடம் பணி நெறிமுறைகள் இருக்கும். நீண்ட கால இலக்கை நோக்கிய பயணத்தில் எப்போதும் பிஸியாக இருப்பார்கள். பொறுமையாக இருந்து வெற்றிப் பெறுவார்கள். தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ளும் மன தைரியம் இவர்களிடம் இருக்கும். மற்றவர்களை மதித்து நடப்பார்கள். அதுவே அவர்களுக்கு பலமாக அமையும். வாழ்க்கையில் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைப்பார்கள்.