எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன. இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.
ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.
அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.
எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் அவர்களை ஒரே பார்வையில் மற்றவர்களை கவர்ந்து விடுவார்கள். அழகு சில நேரங்களில் ஆபத்தில் முடியலாம். அப்படியாயின், என்னென்ன தேதிகளில் பிறந்தவர்கள் அழகுடன் கூடிய ஆபத்தை வைத்திருப்பார்கள் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
எண் 9 | 9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அன்பாகவும், வேடிக்கையாகவும் இருப்பார்கள். பிறரை சிரிக்க வைக்கும் அளவுக்கு நகைச்சுவை கூறுவார்கள். ஒரு பிரச்சினை வந்தால் அதனை நகைச்சுவை வடிவில் சரிச் செய்து விடுவார்கள். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இதனால் மற்றவர்களால் அதிகமாக விரும்பப்படுவார்கள். மாறாக இவர்களிடம் பழகும் பொழுது பிரச்சினை இவர்களுக்கு இருக்காது, மற்றவர்களுக்கு சில சமயங்களில் வரலாம். |
எண் 5 | 5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் தைரியமாக பிரச்சினைகளை சரிச் செய்வார்கள். எப்போதும் புதுமையான தோற்றத்தை விரும்புவார்கள். இந்த பண்பு அவர்களை வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும். வேடிக்கையானவர்கள் போல் குறும்புத்தனம் செய்வார்கள். இதனால் மற்றவர்களை இவர்களை விரும்ப வாய்ப்பு உள்ளது. |
எண் 1 | 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பார்கள். அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு புத்திசாலித்தனமாக செயற்படுவார்கள். இதனால் மற்றவர்கள் அதிகமாக இவர்களை விரும்புவார்கள். |