ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, தோற்றம், விசேட ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் முதல் பார்வையிலே பெண்களை கவரும் அளவுக்கு அழகிய உடல் தோற்றத்தையும், வசீக முகத்தையும், காந்தம் போன்ற பார்வையையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அப்படி பிறப்பிலேயே பெண்களை மயக்கும் தோற்றம் கொண்ட ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
காதல் மற்றும் அன்பின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசி ஆண்கள் இயல்பாகவே காதல் மற்றும் திருமண வாழ்ககை மீது அதீத ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.
நீதி, நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இவர்களின் தோற்றம் மற்றவர்களை முதல் பார்வையிலேயே வசீகரிக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கும்.
இந்த ராசி ஆண்களுக்கு பெண்களை நொடியில் மயக்கும் ஆற்றல் இயல்பாவே இருக்கும். இவர்களின் கண்களில் மற்றவர்களை ஈர்க்கும் ஒரு விசித்திர சக்தி நிச்சயம் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்த ஆண்கள் மிகவும் மர்மமானவர்களாக இருப்பார்கள். காந்தத்தன்மை மற்றும் வசீகரிக்கும் ஆற்றல் இவர்களிடம் நிச்சயம் காணப்படும்.
விருச்சிக ராசிக்காரர்கள் கம்பீரமான தோற்றத்துடன் ராஜா போல் காட்சியளிப்பார்கள். இவர்கள் எப்போதும் பெண்களை கவருவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வதில்லை.
இவர்களுக்கு அழகிய பெண்களின் பழக்கம் மிகவும் சுலபமாகவே ஏற்படுட்டுவிடும். பெரும்பாலும் இந்த ராசி ஆண்கள் பேரழகன்களாக இருப்பார்கள்.
சிம்மம்
சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசி ஆண்கள் இயல்பாகவே அதிக பிரகாசம் மற்றும் தவிர்க முடியாத ஆற்றலை வெளிப்படுத்துவர்களாக இருப்பார்கள்.
இவர்களுக்கு இயல்பாகவே மற்றவர்களை கட்டுப்படுத்தி அடக்கியாளும் அளவுக்கு அதிக தலைமைத்துவ ஆற்றல் இருக்கும்.
இந்த ராசி ஆண்களின் கம்பீர தோற்றம் மற்றும் வசீகரிக்கும் புண்ணகை பெண்களை கண்ணிமைக்கும் நேரத்தில் மயக்கிவிடும் தன்மை கொண்டதாக இருக்கும்.
சிம்ம ராசி ஆண்கள் இயற்கையாகவே எந்த சூழலிலும் பிரகாசிக்கிறார்கள். அவர்களின் சூடான, வெளிப்படையான முகங்கள் மற்றும் தைரியமான ஆளுமைகள் காரணமாக அவர்களைப் புறக்கணிப்பது யாருக்கும் கடினம்.