சமீப காலமாக, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, முடி தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். முடி உதிர்தல், முன்கூட்டியே நரைத்தல், முடி பிளவுகள், பொடுகு போன்றவை இதில் அடங்கும்.

இவற்றுக்கு தீர்வு காண பலரும் சந்தையில் கிடைக்கும் பலவிதமான ஹேர் கேர் தயாரிப்புகளை பயன்படுத்துகின்றனர். ஆனால், அதுவே தலைமுடியின் ஆரோக்கியத்தை மேலும் பாதிக்கிறது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதற்கு ஒரு தீர்வாக வீட்டிலேயே கிடைக்கும் ஒரு பொருள் உள்ளது. அது தான் கற்றாழை ஜெல். இதனுடன் சில பொருட்களை கலந்து பூசினால் முடி அடர்த்தியாக வளரும்.

கற்றாழை ஜெல்லுடன் இந்த பொருளை கலந்து பூசுங்க - முடி காடு போல வளரும் | Things To Mix With Aloe Vera Hair Growth Beauty

கற்றாழை ஜெல் + முட்டை ஹேர் மாஸ்க்

ஒரு முட்டையின் கருக்கையுடன் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்க்கவும். அதை தலைமுடி முழுவதும் தடவி 20 நிமிடங்கள் வைத்துவிட்டு லேசான  ஷாம்பு போட்டு குளிக்கவும். முட்டையில் உள்ள புரதச்சத்து, முடி உதிர்தலை குறைக்கும்; கற்றாழை ஈரப்பதத்தை அளிக்கும். வாரத்தில் ஒரு முறை பயன்படுத்தலாம்.  

கற்றாழை ஜெல்லுடன் இந்த பொருளை கலந்து பூசுங்க - முடி காடு போல வளரும் | Things To Mix With Aloe Vera Hair Growth Beauty

கற்றாழை ஜெல் + வெந்தயம் ஹேர் மாஸ்க்

வெந்தயத்தை இரவில் ஊறவைத்து, காலை அரைத்து பேஸ்ட் தயாரிக்கவும். அதில் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்க்கவும். தலைமுடிக்கு தடவி 30 நிமிடங்கள் வைத்துவிட்டு சுத்தமான நீரால் கழுவவும். இது பொடுகு, முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக அமையும்.  

கற்றாழை ஜெல் + தயிர் ஹேர் மாஸ்க் 

ஒரு சிறிய கப் தயிருடன் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்து குழைத்துக்கொள்ளவும். தலைமுடிக்கு தடவி 30 நிமிடங்கள் வைக்கவும். பின்னர் லேசான ஷாம்பு பயன்படுத்தவும். பொடுகு மற்றும் வறண்ட முடிக்கு இது மிகச் சிறந்த பராமரிப்பு. வாரத்திற்கு 2 முறை செய்வது சிறந்தது.

கற்றாழை ஜெல்லுடன் இந்த பொருளை கலந்து பூசுங்க - முடி காடு போல வளரும் | Things To Mix With Aloe Vera Hair Growth Beauty

கற்றாழை ஜெல் + வெங்காயச் சாறு ஹேர் மாஸ்க்

2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் 2 ஸ்பூன் வெங்காயச் சாறு சேர்க்கவும். அதை உச்சந்தலையில் நன்கு தடவி 20 நிமிடங்கள் வைத்தபின் ஷாம்பு போட்டு கழுவவும். வெங்காயத்தில் உள்ள கந்தகம், முடி வளர்ச்சியை தூண்டும்; முடி அடர்த்தி அதிகரிக்கும். வாரத்தில் 2 முறை பயன்படுத்தலாம்.

கற்றாழை ஜெல்லுடன் இந்த பொருளை கலந்து பூசுங்க - முடி காடு போல வளரும் | Things To Mix With Aloe Vera Hair Growth Beauty

கற்றாழையில் உள்ள ஈரப்பதமூட்டும் தன்மை, தலைமுடியை மென்மையாகவும், சீராகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும், இது தலைமுடியின் வளர்ச்சி, அடர்த்தி, பொடுகு நீக்கம் என பல்வேறு அம்சங்களில் நல்ல பலன்கள் தரக்கூடியது.