தயிர் கொண்டு முகத்தில் உள்ள அழுக்கு, கருமையை நீக்குவதற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
கால்சியம் சத்து அதிகமாக கொண்ட தயிரை அன்றாடம் உணவில் எடுத்துக்கொள்ளும் பழக்கத்தை பலரும் வைத்துள்ளனர்.
ஆனால் உணவாக மட்டுமின்றி அழகுக்காகவும் தயிரை நாம் பயன்படுத்த முடியும். தயிருடன் சில பொருட்களை கலந்து முகத்தில் ஃபேஸ் பேக் போட்டால் முகத்தினை பளபளப்பாக வைத்திருக்க முடியும்.
தயிருடன் ரோஸ் வாட்டர் கலந்து பேஸ் பேக் போட்டு 15 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரால் கழுவினால், நல்ல மாற்றத்தை பெறலாம்.
தயிருடன் மஞ்சள் கலந்து இந்த பேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை போட்டால் நல்ல பலனை பெறலாம்.
தயிர் மற்றும் தேன் கலந்த பேஸ் பேக்கை முகத்தில் போட்டு 20 நிமிடம் கழித்து சாதாரண நீரில் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
தயிருடன் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து சாதாரண தண்ணீரில் கழுவினால், முகம் பளபளப்பாகவும், எண்ணெய் பசை இல்லாமலும் இருக்கும்.
தயிர் மற்றும் தக்காளி விழுது சேர்த்து பேஸ் பேக் தயாரித்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகம் பொலிவாக இருக்கும்.
தயிருடன் கடலைமாவு கலந்து முகத்தில் தடவி சாதாரண தண்ணீரில் கழுவவும், இதுவும் முகத்தினை பளபளப்பாக வைக்கும்.
வெறும் தயிரைக் கொண்டு முகத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து கழுவினாலும் நல்ல பலனை காணலாம்.
இவ்வாறு நாம் தயிரை முகத்திற்கு பயன்படுத்துவதால் இறந்த சரும செல்களை நீக்க உதவுகின்றது.
சருமத்தின் நெகிழ்ச்சி தன்மையை மேம்படுத்தி, சருமத்தின் பொலிவை ஊக்குவிக்கும்.
சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைப்பதுடன், கருப்பு புள்ளிகளை குறைக்கவும், சருமத்தை இறுக்கமாகவும் உதவுகின்றது.