ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் பெயர்ச்சி, இணைவு போன்ற காரணங்களால் பலவிதமான யோகங்கள் உருவாகின்றன. அதில் மிகவும் சிறப்பான யோகம் ஒன்றாகக் கருதப்படும் “ராஜயோகம்”, தற்போது 84 ஆண்டுகளுக்குப் பிறகு சுக்கிரனால் உருவாகியுள்ளது. இதில் அதிஷ்டம் பெறும் ராசிகள் நீங்கள் ஒருவரா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

சுக்கிரன் தற்போது மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். அதே ராசியில் ஏற்கனவே குருபகவான் உள்ளதால், இந்த இரண்டு சுப கிரகங்களும் இணைந்து கஜலட்சுமி ராஜயோகம் உருவாக்கியுள்ளன.

மேலும் ஆகஸ்ட் 1 அன்று, சுக்கிரன் யுரேனஸ் கிரகத்துடன் 30° கோணத்தில் இணைந்து, த்வி துவாதச ராஜயோகம் எனப்படும் அரிய யோகத்தை உருவாக்குகிறார்.

84 வருடங்கள் கழித்து சுக்கிரன் உருவாக்கும் அரிய ராஜயோகம் - அதிர்ஷ்ட மழை எந்த ராசிகளுக்கு? | After 84 Years 3 Zodiac Royal Life Sukkira Rajayog

“த்வி துவாதச” என்றால் ஒரு கிரகம் இருக்கும் இடத்திலிருந்து 2-வது மற்றும் 12-வது வீட்டுகளில் மற்ற கிரகங்கள் இருப்பது. இந்த யோகம் சுப கிரகங்கள் தொடர்பில் இருந்தால் நல்ல பலன்கள், அசுப கிரகங்கள் இருந்தால் தீய விளைவுகள் தரும்.

மிதுன ராசி இந்த யோகம் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றங்களை உருவாக்கும். தொழில் முன்னேற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற வாய்ப்புகள் அதிகம். வேலை தேடுபவர்கள் நல்ல வேலைக்கு ஏற்பாடாக வாய்ப்பு. திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் சுமூக உறவுகள். வீடு, நிலம் முதலீடுகளுக்கான சூழ்நிலை ஏற்படும்.
துலாம் ராசி எதிர்பாராத பண வரவுகள், பழைய சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு. வேலை தொடர்பான பயணங்களில் நிதி ஆதாயம். புதிய திட்டங்கள் வெற்றி பெறும். உயர் பதவிகள், பொருளாதார மேம்பாடு. குடும்பத்தில் அமைதி, கணவன்-மனைவி உறவு சீராகும். புதிய வீடு, வாகனம், ஆபரணம் வாங்கும் யோகம்.
கும்பம் ராசி நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி, தொழிலில் லாபம். கலை, இசை, படைப்புத் துறையில் புகழ், வருமானம். சுகாதார மேம்பாடு, வீட்டு சுப நிகழ்வுகள். குழந்தை பெற முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி. திடீர் பண வரவு, சம்பள / பதவி உயர்வு, புதிய முதலீடுகள். சேமிப்பு அதிகரித்து குடும்ப மகிழ்ச்சி நிலவும்.