ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் தாக்கம் செலுத்துவது போன்று இவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களிலும் ஆதிக்கத்தை கொண்டிருக்கும்.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே மாற்றங்களின் மீது நாட்டம் இல்லாதவர்களாகவும், அதனை அடிப்படையில் வெறுப்பவர்களாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மாற்றங்களை அடியோடு வெறுக்கும் ராசியினர் இவர்கள் தானாம் | Which Zodiac Signs Are Hate Changes

ரிஷப ராசி

இந்த ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாதமான ஆளுமை கொண்டவர்களாவும், நீதி நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் இருப்பார்களாம். 

மாற்றங்களை அடியோடு வெறுக்கும் ராசியினர் இவர்கள் தானாம் | Which Zodiac Signs Are Hate Changes

இவர்களின் அதீத பிடிவாத குணம் மாற்றங்களுக்கு தங்களை உட்டுத்திக்கொள்ள அனுமதிக்காது. எனவே அவர்களுக்கு மாற்றம் ஒரு பெரிய விஷயமாக தோன்றும்.

அவர்கள் ஒரு விடயம் இப்படி தான் இருக்க வேண்டும் என முடிவு செய்த பின்னர் அதில் ஏற்படும் சிறிய மாற்றங்களை கூட எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் இருப்பார்கள். 

சிம்ம ராசி

சிம்ம ராசியில் பிறந்தவர்கள்  தங்கள் சூழ்நிலைகளைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

மாற்றங்களை அடியோடு வெறுக்கும் ராசியினர் இவர்கள் தானாம் | Which Zodiac Signs Are Hate Changes

இவர்களுக்கு தங்கள் மனதை மாற்ற சில முக்கிய வாதங்கள், ஆதாரங்கள் என்பன நிச்சயம் தேவைப்படும். இவர்களின் இந்த குணம் மாற்றங்களை இயல்பாகவே வெறுக்கின்றது.

சிம்ம ராசிக்காரர்களை மாற்றங்கள் எப்போதும் எரிச்சலூட்டுகின்றன, ஆனால் அவர்கள் அதை மற்றவர்கள் முன் மனதார ஏற்றுக்கொள்வது போல் காட்சிப்படுத்திக்கொள்வார்கள்.

கும்ப ராசி

கும்ப ராசியில் பிறந்தவர்கள் நிலைத்தன்மைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். எனவே மாற்றங்களை அவர்களின் மனம் எளிதில் ஏற்றுக்கொள்ளாது. 

மாற்றங்களை அடியோடு வெறுக்கும் ராசியினர் இவர்கள் தானாம் | Which Zodiac Signs Are Hate Changes

ஆனால் மற்றவர்களின் நலனுக்காக மாற்றங்களை சகித்துக்கொள்வார்கள். இருப்பிளும் அவற்றை தனிப்பட்ட முறையில் அனுபவிக்க வேண்டியிருக்கும் போது அவர்கள் அதை வெறுக்கின்றார்கள். எதிர்பாராத மாற்றங்கள் இவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கும்.