வித்தியாசமான முறையில் ஸ்பானிஸ் ஆட்லேட் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
முட்டை - 4
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
முட்டை கோஸ் - அரை கப் ( பொடியாக நறுக்கியது)
உருளை கிழங்கு - 1 ( பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
மோஸ்சரெல்லா சீஸ் - சிறு துண்டுகளாக
மிளகு பொடி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்கவும். பின்பு பெரிய வெங்காயம், முட்டை கோஸ், உருளைகிழங்கு, குடைமிளகாய் இவற்றுடன் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதனை தனியாக ஒரு பவுலில் எடுத்து வைத்துக்கொள்ளவும். மற்றொரு பவுலில் நான்கு முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளவும். இதில் சிறிதளது மிளகுதூள், உப்பு சேர்த்து நன்கு நுரை வரும்வரை அடித்து கலக்கவும்.
இதனுடன் வதக்கிய வைத்திருக்கும் காய்களை சேர்த்து கலக்கவும். பின்பு ஆட்லேட் போடுவதற்கு கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து அதில் அடித்து வைத்திருக்கும் முட்டையை பாதி மட்டும் ஆம்லேட் போன்று ஊற்றவும்.
பின்பு ஆம்லேட் மீது சீஸை தூவிவிட்ட பின்பு மீதமுள்ள முட்டையையும் ஊற்ற வேண்டும். பின்பு முன்னும், பின்னும் திருப்பி போட்டால் சுவையான ஸ்பானிஷ் ஆம்லேட் தயார்.