பொதுவாகவே மனிதர்களாக பிறப்பெடுத்த அனைவருக்கு பணத்துக்கு பஞ்சமின்றி வாழ்க்கை முழுவதும் சொகுசாக வாழ வேண்டும் என்று ஆசை இருக்கும்.
இருப்பினும் எவ்வளவு தான் கடினமாக உழைத்தாலும் சிலருக்கு பணக்காரர்கள் ஆக முடிவதில்லை. ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் குறைந்த முயற்சியிலேயே கோடிகளில் புரளும் யோகம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.
அப்படி 2026 ஆம் ஆண்டுக்கான ஜோதிட கணிப்பின் பிரகாரம், வருகின்ற ஆண்டில் கோடீஸ்வரர் ஆக மாறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் பெரும்பாலான மக்கள் நினைப்பதை விட கடினமாக உழைக்கிறார்கள். இவர்கள் முதலிலேயே ஒரு இலக்கை நிர்ணயம் செய்துவிட்டு, அதை நோக்கி அமைதியாக உழைக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் வெற்றி நீண்ட நாள் அமைதியின் விளைவாக அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கும்.
2026 ஆம் ஆண்டு அந்த மெதுவான, நிலையான ஏற்றம் உண்மையில் பலனளிக்கத் தொடங்கும்.இவர்களுக்கு அடுத்த ஆண்டில் கோடீஸ்வர யோகம் காத்திருக்கிறது.
தனுசு
சில ராசிகள் பொறுமையிலிருந்து முன்னேற்றங்களைப் பெறுகின்றன. சுதற்திரத்துக்கு சாகச உணர்வுகளுக்கும் பெயர் பெற்ற இவர்கள் இயல்பாகவே மற்றவர்களை வியப்பில் ஆழ்த்துவதில் கில்லாடிகள்.
இவர்கள் பார்ப்பதற்கு விளையாட்டு தனமாக தெரிந்தாலும் பெரிய இலக்கை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் அதை வெளியில் சொல்லிக்கொள்ள மாட்டார்கள்.
இவர்களின் நீண்ட நாள் உழைப்புக்கு 2026 ஆம் ஆண்டில் பிரம்மிக்க வைக்கும் கோடீஸ்வர யோகம் காத்திருக்கின்றது.
கடகம்
கடகம் பெரும்பாலும் பணத்தைப் பற்றிப் பேசுவதில்லை. அனால் இவர்களுக்கு பணத்தை இரட்டிப்பபாக்கும் கலை நன்கு தெரிந்திருக்கும்.இவர்கள் இயல்பாகவே சிறந்த நிதி முகாமைத்துவ ஆற்றலை கொண்டிருப்பார்கள்.
நண்டுகள் எப்ப வித்தியாசமாக நகர்ந்து அதன் இலக்கை அடைகின்றதோ, அதை ராசி சின்னமான கொண்ட இவர்கள் மற்றவர்கள் போல் இல்லாமல் வித்தியாசமான முறையில் வெற்றியடைவார்கள்.
2026 ஆம் ஆண்டு பண ரீதியாக இவர்களுக்கு பெரும் அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகின்றது. கோடிகளில் புரளும் வாய்ப்பு அமையும்.