ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமைககள், குணங்கள் என்பவற்றில் மாத்திரமன்றி அவர்களின் உடல் தோற்றத்திலும் நேரயாக ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே சற்று உடல் பருமனான தோற்றத்துடன் காணப்படுவார்கள். இவர்கள் எவ்வளவு முயன்றாலும் ஒரு அளவுக்கு மேல் அவர்களின் உடல் எடையை குறைக்கவே முடியாது.

இந்த ராசியினர் எவ்வளவு முயன்றாலும் ஒல்லியாகவே மாட்டாங்க... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Can T Reduce Weight

அப்படி இயல்பாகவே பருத்த உடலமைப்பை கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

இந்த ராசியினர் எவ்வளவு முயன்றாலும் ஒல்லியாகவே மாட்டாங்க... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Can T Reduce Weight

மேஷ ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே உணவை விட்டுக்கொடுக்காத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் ஆறுதல் பெரும்பாலும் உணவாகத்தான் இருக்கும்.

இந்த ராசியினர் உடலை வருத்திக்கொள்ளவும் விரும்புவது கிடையாது.இவர்கள்  விஷயங்கள் தங்கள் திட்டங்களின்படி நடக்காதபோது, இவர்கள் விரும்பும் உணவில் ஈடுபாடு காட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.

இந்த ராசியினர் எப்போதும் எளிதில் மன அழுத்தத்துக்கு ஆளாவதால், அதிலிருந்து வெளிவர அதிகம் உணவின் மீது நாட்டம் செலுத்துகின்றார்கள். இவர்களின் இந்த குணம் இவர்களின் உடல் பருமனுக்கு காரணமாக மாறலாம்.

ரிஷபம்

இந்த ராசியினர் எவ்வளவு முயன்றாலும் ஒல்லியாகவே மாட்டாங்க... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Can T Reduce Weight

ரிஷப ராசிக்காரர்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சிகளை அனுபவிப்பதற்காக அறியப்படுகிறார்கள், குறிப்பாக அந்த மகிழ்ச்சிகளில் உணவும் நிச்சயம் அடங்கும்.

சுக்கிரனால் ஆளப்படும் இவர்கள் இயல்பாகவே சொகுசு வாழ்க்கையின் மீது மோகம் கொண்டவர்களாக இருப்பார்கள். கூடவே இவர்களின் அதிர்ஷ்டமும் இவர்களை அதிகமாக கஷ்டபட விடாது.

இவர்களின் தொழிலும் பெரும்பாலும் இவர்களை அமர்தபடி வைத்துக்கொள்ளும் வகையில் தான் அமையும். சொகுசு வாழ்க்கை வாழவே பிறந்த இவர்களால் எவ்வளவு முயன்றாலும் உடல் பருமனை குறைக்க முடியாத நிலை ஏற்படும்.

கடகம்

இந்த ராசியினர் எவ்வளவு முயன்றாலும் ஒல்லியாகவே மாட்டாங்க... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Can T Reduce Weight

கடக ராசியில் பிறந்தவர்கள் குளிர்சாதன பெட்டியின் அரவணைப்பில் ஆறுதல் காணும் உணர்திறன் மிக்கவர்கள்.இவர்களுக்கு சுவையான மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் மீது அதிக நாட்டம் இருக்கும்.

கேக் மற்றும் ஐஸ்கிறீம் போன்ற சுவைக்காக மட்டுமே சாப்பிடும் உணவுகளை இவர்கள் பசிக்காக சாப்பிடுவதை போல் சாப்பிடுவார்கள். 

இவர்களின் இந்த குணத்தை எவ்வளவு முயன்றாலும் இவர்களால் மாற்றிக்கொள்ள முடிவதில்லை.இதன் விளைவாகவே இவர்கள் எவ்வளவு விரும்பினாலும் இவர்களால் ஒல்லியான தோற்றத்தை பெற முடிவதில்லை.